பொது செய்தி

தமிழ்நாடு

சமயசங்கிலியில் கரும்பு சாகுபடி அதிகரிப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: சமயசங்கலி சுற்றுவட்டார பகுதியில், தை மாதத்தில் அறுவடை செய்யயும் வகையில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பள்ளிபாளையம் அடுத்த ஆசாரிகாடு, சமயசங்கிலி, கரமேடு, ஆவத்திபாளையம், தடுப்பணை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் விவசாயம் நிறைந்தவையாகும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அரசு கரும்பு வழங்குவதால், இந்த பகுதி விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, கரும்பு சாகுபடியில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, கரமேடு விவசாயிகள் கூறியதாவது: சித்திரையில் கரும்பு சாகுபடி துவங்கி, தை மாதம் தொடக்கம் முதலே அறுவடை செய்யும் வகையில் பணி நடக்கிறது. கடந்தாண்டை விட, இந்தாண்டு, 150க்கு ஏக்கருக்கு மேல் இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X