நகராட்சி அலுவலகம் புதுப்பிக்கும் பணி மும்முரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி அலுவலகம் புதுப்பிக்கும் பணி மும்முரம்

Added : ஜூன் 25, 2020
Share

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி அலுவலகம், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. இதுகுறித்து, ஆணையாளர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் போதிய பர்னிச்சர்கள் இல்லாத நிலை இருந்து வந்தது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் நகராட்சி நிதி, 35 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆணையாளர், பொறியாளர், மேலாளர், சுகாதார அலுவலர், ஆர்.ஐ., கட்டட ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு வங்கிகளில் உள்ளது போல் கேபின்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் நிறைவடையும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X