டவுன் பஞ்சாயத்தில் தூய்மை பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டவுன் பஞ்சாயத்தில் தூய்மை பணி தீவிரம்

Added : ஜூன் 25, 2020
Share

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், தூய்மை பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் மற்ற பகுதிகளிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமகிரிப்பேட்டையில் தூய்மை பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று, பிரதான சாலைகளில் குளோரின் பவுடர் தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும், வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்பணியில் மட்டும், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி, வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் துப்புரவு பணிகளும் முடிக்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X