பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் மண்டலத்தில் 10 கோடி முட்டைகள் தேக்கம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அனைத்து பகுதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்ததால், கடந்த சில மாதங்களாக முட்டை விற்பனை கடும் சரிவை சந்தித்தது. இந்நிலையில் நடப்பு மாதம் துவக்கம் முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. எனவே, முட்டை விற்பனை சற்று உயர்ந்தது. இதனால், முட்டையின் விலையும் அதிகபட்சமாக, 4.60 காசு வரை சென்றது. ஆனால், சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில் மீண்டும் ழுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் முட்டை விற்பனை மீண்டும் சரிவடைந்துள்ளது. இதனால், அதன் விலையும் நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டையின் கொள்முதல் விலையை, 3.70 காசு என நிர்ணயம் செய்தாலும், பண்ணையாளர்களுக்கு அந்த விலை கிடைப்பது இல்லை. இதனால் முட்டை ஒன்றுக்கு, ஒரு ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதால், பண்ணையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.


தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது: வழக்கமாக ஜூன் மாதம் துவங்கியதும் பள்ளிகள் திறந்து விடும். ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் சத்துணவுக்கு அனுப்பப்படும் முட்டைகள் தேங்கி வருகின்றன. இதற்கிடையே சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அங்கும் முட்டை விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில், 10 கோடி முட்டைகள் வரை தேக்கமடைந்துள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X