பொது செய்தி

தமிழ்நாடு

அரசு வழிகாட்டுதலை பின்பற்ற நாமக்கல் எம்.பி., அறிவுரை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ''கொரோனா பரவலை தடுக்க, அரசு வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்' என, நாமக்கல் எம்.பி., சின்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், வணிக ரீதியான கடைகள், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள், காலை, 6:00 முதல், 5:00 மணி வரை இயங்கலாம். ஓட்டல்கள் வழக்கம் போல் அரசு அறிவித்தபடி இரவு, 9:00 மணி வரை இயங்கும். கடைகளுக்கு வருவோரும், கடைகளில் உள்ள ஊழியர்களும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமி நாசினி பயன்படுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும், வரும், 30 வரை நடைமுறையில் இருக்கும் என, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார். இந்த வழிமுறைகளையும், மத்திய, மாநில சுகாதாரத்துறையின் அறிவுரைகளையும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X