திண்டமங்கலத்தில் நிவாரண பொருள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டமங்கலத்தில் நிவாரண பொருள் வழங்கல்

Added : ஜூன் 25, 2020
Share

நாமக்கல்: நாமக்கல் அருகே பொதுமக்களுக்கு கொரோனா ஊரடங்கு நிவாரணமாக அரிசி வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, நாமக்கல் அடுத்த திண்டமங்கலம் ஊராட்சியில், பொதுமக்கள் மற்றும் கிராம தூய்மைப்பணியாளர்களுக்கு நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி மோகன் நிவாரண உதவி வழங்கினார். மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திண்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஏழை தொழிலாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் 100 பேருக்கு, தலா, ஐந்து கிலோ அரிசி மற்றும் பொருட்கள் வினியோகிக்கப்பட்டன. தாசில்தார் பச்சமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X