தடுப்பணை நீர்த்தேக்கத்தில் ஆகாயத்தாமரை அதிகரிப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: ஓடப்பள்ளி தடுப்பணையின் நீர்த்தேக்கத்தில், ஆகாயத்தாமரை செடிகள் அதிகரித்து வருவதால், அவற்றை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, தண்ணீர் தேக்கி மின் உற்பத்தி நடக்கிறது. தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், மின் உற்பத்திக்கு தேவையான தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை செடிகள், கடந்த சில நாட்களாக நீர்த்தேக்கம் பகுதியில் படர்ந்துள்ளது. இது, அப்படியே வளர்ந்து முற்றிலும் படர்ந்துவிடும். இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குளிக்கும் போதும், துணி துவைக்கும் போதும் கவனகுறைவாக இருந்தால், காலில் சிக்கிக் கொள்ளும். இதனால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், விஷப்பூச்சிகளும் உலா வருகின்றன. ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X