ஒரு மகனுக்காக 5 மகள்களை பெற்றெடுப்பதா?: காங்.எம்.எல்.ஏ கருத்தால் சர்ச்சை| 5 daughters for a son: Congress MP leader makes 'sexist' remark, apologises | Dinamalar

ஒரு மகனுக்காக 5 மகள்களை பெற்றெடுப்பதா?: காங்.எம்.எல்.ஏ கருத்தால் சர்ச்சை

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (18)
Share
Madhya Pradesh, Congress Leader, Daughters For A Son, Shivraj Singh Chauhan, காங்கிரஸ், மகள்கள், மகன், டுவிட், மத்திய பிரதேசம், pan BJP govt, Jitu Patwari, demonetisation, GST, inflation, unemployment,  BJP-led central government, recession

போபால்: நாட்டின் வளர்ச்சியை மகனாகவும், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை மகளாகவும் ஒப்பிட்டு காங்.,எம்.எல்.ஏ டுவிட்டரில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ம.பி.,யின் ரவு தொகுதியை சேர்ந்த காங்., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் கல்வி அமைச்சருமான ஜிது பட்வாரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛மக்கள் ஒரு மகனை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு பதிலாக அவர்களுக்கு கிடைத்தது ஐந்து மகள்கள். இந்த மகள்கள் அனைவரும் பிறந்தனர். ஆனால் விகாஸ் என்ற மகன் இன்னும் பிறக்கவில்லை' என பதிவிட்டிருந்தார். 2014 மற்றும் 2019ம் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் பிரதமர் மோடி முன்வைத்த ‛சப்கா சாத் சப்கா விகாஸ்' என்ற கோஷத்தை கேலி செய்கிறேன் என பெண் குழந்தைகளை தரக்குறைவாக ஜிது பட்வாரி விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.


latest tamil news


ஜிது பட்வாரியின் கருத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பா.ஜ., இது குறித்து, காங்., தலைவர் சோனியா பதிலளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. ‛ராணி துர்காபாயின் தியாகத்தை நாடே கொண்டாடி வரும் தினத்தன்று, மகனுக்கு பதிலாக 5 மகள்கள் பிறந்துள்ளனர் என பட்வாரி கூறியுள்ளார். மகள்களாக பிறப்பது என்ன குற்றமா? மகள்களை இழிவுப்படுத்தும் பணியை சோனியா அவருக்கு வழங்கியுள்ளாரா?' என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கண்டனத்தை பதிவு செய்தார்.

காங்.,எம்.எம்.ஏ.,வின் கருத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ‛மக்கள், இது போன்ற மனநிலையுடன் உள்ளவர்களை தலைவர்கள் என்று அழைப்பது வருத்தமளிக்கிறது. அவர்கள் தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன கற்றுகொடுப்பார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரிடமிருந்து நிச்சயமாக விளக்கம் கேட்கப்படும்' என தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா ஷர்மா தெரிவித்தார்.


latest tamil newsமன்னிப்பு கேட்ட பட்வாரி

கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து காங்.,எம்.எல்.ஏ ஜிது பட்வாரி, ‛நாட்டின் பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, மந்தநிலை ஆகியவற்றால் மோடி உடைத்துவிட்டார். வளர்ச்சிக்காக மக்கள் இதையெல்லாம் சகித்து கொண்டார்கள். என்னுடைய கருத்து யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன். மகள்களைப் பொருத்தவரை அவர்கள் தெய்வங்கள்,' எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X