அரசு அலுவலகங்கள் அருகே சுகாதார சீர்கேடால் அவதி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

மல்லசமுத்திரம்: சூரியகவுண்டம்பாளையத்தில், வடிகால் வசதி இல்லாததால், அரசு அலுவலகங்கள் அருகே கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.


மல்லசமுத்திரம் அருகே, மேல்முகம் பஞ்., சூரியகவுண்டம்பாளையத்தில், 350க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில், பல ஆண்டுகளாக சென்று கொண்டிருந்த வடிகால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சில நபர்களால் காம்பவுண்ட் சுவர் எழுப்பி தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது. அதனால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அப்பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது. இதன் அருகே பஞ்., கட்டடம், நூலகம், அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், தனியார் பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. கொசு உற்பத்தியாகி, அரசு அலுவலர்கள், குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை துன்புறுத்துகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. கிராம மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, கழிவுநீர் பாதையில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்து, தங்கு தடையின்றி கழிவுநீர் செல்லும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X