சி.பி.எஸ்.இ., 10, 12ம் வகுப்பு தேர்வு ரத்து

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
cbse, icse, supreme court, sc, exam, 10th exam, cancelled, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, சுப்ரீம்கோர்ட், உச்சநீதிமன்றம். தேர்வு, ரத்து

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில், கடந்த, பிப்ரவரி மாதம், 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம், 10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் துவங்கின. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், 12ம் வகுப்பில், சில பாடங்களுக்கு தேர்வு நடத்த முடியாமல் போனது. 10ம் வகுப்பை பொருத்தவரை, டில்லியில் சில பகுதிகளை தவிர, நாடு முழுவதும் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. ஒத்தி வைக்கப்பட்ட, 12-ம் வகுப்பு தேர்வுகளை, ஜூலை, 1 - 15ம் தேதிக்குள் நடத்த முடிவு செய்து, அதற்கான அட்டவணையை, சி.பி.எஸ்.இ,. கடந்த, மே மாதம் வெளியிட்டது.


latest tamil news
கொரோனா பரவல் காரணமாக, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில், சிபிஎஸ்இ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ஜூலை 1 முதல் 15 வரை நடத்த திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. டில்லி, மஹாராஷ்டிரா, தமிழகத்தில், தேர்வுகளை நடத்தும் சூழ்நிலை இல்லை என மாநில அரசுகள் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல், ஐசிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THOMAS LEO - TRICHY,இந்தியா
25-ஜூன்-202020:39:16 IST Report Abuse
THOMAS LEO One drawback is there. JEE student get 75% in overall +2 score. If they get one subject the % will be different. Any way STUDENT WAS ALL PASS In ONE SUBJECT
Rate this:
Cancel
25-ஜூன்-202018:30:55 IST Report Abuse
kulandhai Kannan பஸ், ரயில், விமானம், பார்கள், காய், கறி, மீன் சந்தை இப்படி அனைத்தும் நடக்கும்போது, மிகக்குறைந்த அளவே, அவரவர் பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு நடத்த முடியாதா? பெற்றோர்கள் கோரினார்கள் என்றால் எப்படி? இவர்கள் ஏதாவது வாக்கெடுப்பு நடத்தினார்களா? கோர்ட்டுகளும் சுலபமாக அழுத்தத்திற்கு உள்ளாவது வியப்பளிக்கிறது.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
25-ஜூன்-202016:24:36 IST Report Abuse
R.Kumaresan வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்தியா டெல்லி CBSE, CBSC 1to9 தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக சொல்லியிருந்தார்கள் 10 தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக சொன்னார்கள் ஜூன்25,2020 12 தேர்வு எழுதாமலேயே ரத்து செய்திருக்கின்றனர்..R.Kumaresan. இந்தியா தமிழ்நாட்டில் 1to9 தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக சொல்லியிருக்கிறார்கள் 10 தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக சொல்லியிருக்கிறார்கள்..R.Kumaresan.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X