பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டில் கொரோனா சிகிச்சையும் சேர்ப்பு

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் கொரோனா சிகிச்சையையும் சேர்க்கப்பட்டுள்ளது.தமிழக அரசு ஊழியர்களுக்காக கடந்த 2016ம் ஆண்டு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தில் தகுதியானவர்கள் ஆண்டுக்கு ரூ.4 லட்சம்
CoronaTreatment, TN, GovernmentEmployees, InsuranceScheme

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் கொரோனா சிகிச்சையையும் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்காக கடந்த 2016ம் ஆண்டு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தில் தகுதியானவர்கள் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரையிலும், சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலும் மருத்துவ சேவைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் 2016ம் ஆண்டு ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது.

வருகின்ற 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள காப்பீட்டு திட்டத்தை மேலும், ஓராண்டுக்கு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதலை பெற்று 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கொரோனாவுக்கான சிகிச்சையும் சேர்க்கப்பட்டு அதற்கான கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அரசு ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபெறும் நிலையில், வென்டிலேட்டர் பயன்படுத்தாத நிலையில் நாள் ஒன்றுக்கு ரூ.6,500-ம், வென்டிலேட்டர் பயன்படுத்தினால் ரூ.8,500-ம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படாத நிலையில், ஏ-1 மற்றும் ஏ-2 பிரிவு மருத்துவமனையில் தனி அறை சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு மருந்து செலவையும் சேர்த்து ரூ.9,500, ஏ-3 முதல் ஏ-6 பிரிவு மருத்துவமனைகளில் ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுக்கான பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை காப்பீட்டு நிறுவனம், மருத்துவமனைக்கு வழங்கும். இதற்காக அரசு ஊழியர்களுக்கு ரூ.5 கோடியையும், ஓய்வூதியர்களுக்கு ரூ.2.5 கோடியையும் தொகுப்பு நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
25-ஜூன்-202015:47:41 IST Report Abuse
sundarsvpr அரசு மருத்தவ மனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை குறையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X