'வியாழனின் நிலவான யூரோபாவில் உயிர்கள் வாழ முடியும்': நாசா

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: வியாழன் கோளின் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்றான யூரோபாவில் உள்ள கடல் மேற்பரப்பில் உறைந்த நிலையில் நீர் இருப்பதால், அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள், இந்த கடல், நீர் கொண்ட தாதுக்களை உடைப்பதன் மூலம் உருவாகியிருக்கலாம் என
NASA, Scientists, Europa, Jupiter Moon, Possible, Life, Jet Propulsion Laboratory, JPL, California,  European Space Agency, NASA scientists, ice-shell surface of Europa, நாசா, விஞ்ஞானிகள், யூரோப்பா, வியாழன், நிலவு

வாஷிங்டன்: வியாழன் கோளின் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்றான யூரோபாவில் உள்ள கடல் மேற்பரப்பில் உறைந்த நிலையில் நீர் இருப்பதால், அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள், இந்த கடல், நீர் கொண்ட தாதுக்களை உடைப்பதன் மூலம் உருவாகியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். மெய்நிகர் கோல்ட்ஸ்மிட் புவி வேதியியல் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விஞ்ஞானிகளின் பணிகள் இன்னமும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. நாசாவின் கலிலியோ மிஷன் மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஆகியவற்றின் தரவுகளை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் தங்கள் மாதிரியை உருவாக்கினர். ஏற்கனவே கடந்த 2016ல் அதன் மேற்பரப்பில் நீராவி புகை வெளியேறியதற்கான ஆதாரம் இருந்ததை கண்டறிந்தனர்.


latest tamil news


யூரோபாவில் உருமாற்றத்தால் கடல் போன்று உருவாகியிருக்கலாம். வெப்பம், அழுத்தம் அல்லது பிற இயற்கை நிகழ்வுகளால் பாறைகளின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாமென ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
வெப்பமயமாதல், அதிக அழுத்தம் ஆகியவற்றால் இயற்கையான கதிரியக்கம் அல்லது வியாழன் கோளின் ஈர்ப்பு விசையால் உருவாகும் அலை போன்றவற்றால், நீர் தாதுக்களில் இருக்கும் தண்ணீர் வெளியேறி இருக்கலாமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


latest tamil news


'இந்த கடல் உயிர்கள் வாழக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாகவும், நாசாவின் யூரோபா கிளிப்பர் திட்டம், அடுத்த சில ஆண்டுகளில் துவங்கப்படவுள்ளது. எனவே எங்கள் பணி, யூரோபாவின் வாழ்விடத்தை ஆராயும் இந்த திட்டத்துக்கு தயாராகும் நோக்கத்தில் உள்ளது' என விஞ்ஞானி மோஹித் மெல்வானி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian - Bangalore,இந்தியா
25-ஜூன்-202022:10:57 IST Report Abuse
Balasubramanian எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? என்று அவனவன் காத்துக் கொண்டு இருக்கிறான் எங்கே கொரோனா தொல்லை இல்லையோ, அங்கே சீக்கிரம் ஒரு இடத்தை பிடிங்கப்பா இந்த மாதிரி வேற்று கிரகமாக இருந்தால், கிரகசாரம் பிடித்த, அரசியல் வாதிகள் தொல்லையிலிருந்தும் மீளலாம்
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
25-ஜூன்-202021:30:15 IST Report Abuse
Anbu Tamilan DMK & Cong alliance is ready to buy the properties.
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
25-ஜூன்-202017:39:56 IST Report Abuse
Karthik பூமியை முடிந்த அளவிற்கு அதிகமாகவே கெடுத்துவிட்டு, அடுத்த கோள்கள் மற்றும் நிலவுகளைக் கெடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறான், மனிதன். இதற்குப்பெயர்தான் வளர்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X