பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று: கிராமங்களில் கணக்கெடுப்பு பணி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 கொரோனா தொற்று: கிராமங்களில் கணக்கெடுப்பு பணி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கிராமங்களில், வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் உள்ள வீடுகள் குறித்து, சுகாதார துறையினர் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பரவல் நிலை குறித்து அறிய, பரிசோதனை செய்து உறுதி செய்வது அரசுக்கு சவாலாக உள்ளது. தொற்று பரவிய முதல்கட்டத்தில், அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.தற்போது, எவ்வித அறிகுறியும் இன்றி, கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவில் நடமாடி, பலருக்கு தொற்று பரப்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில், 60 வயதுக்கு மேற்பட்டோர், ரத்த அழுத்தம், இருதய நோய், சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள், ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பரிசோதனை செய்யப்படுகிறது. கிராமங்களில் முகாம் அமைத்து, பரிசோதனை நடத்த வசதியாக, சுகாதார ஊழியர்கள் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துகின்றனர். வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ள வீடுகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, தொலைபேசி எண்களுடன் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.பரிசோதனை முகாம் நடத்தும் போது, அவர்களுக்கு தகவல் அளித்து, பரிசோதனை செய்ய வரவழைக்கின்றனர். தெற்கு ஒன்றிய கிராமங்களில் இந்த கணக்கெடுப்பு பணி தீவிரமைடந்துள்ளது.கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சின்னாம்பாளையத்தில் வீடுவீடாக கணக்கெடுப்பு நடத்தினர். அப்பகுதியில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் வீடு உள்ளதால், ஓரிரு நாட்களில் பரிசோதனை முகாம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X