பொது செய்தி

தமிழ்நாடு

மாநில, மாவட்ட எல்லை ரோடுகளில் கண்காணிப்பு அவசியம்! நடவடிக்கையில் அலட்சியம் வேண்டாம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், மாநில, மாவட்ட எல்லைகளில் இருந்து, குறுக்கு வழிகளை பயன்படுத்தி பலரும் மாவட்டத்தினுள் வருவதால், கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, கோவையில் கொரோனா பாதிப்பு மிகக்குறைவாக இருந்தது. தற்போது, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து 'இ - பாஸ்' பெற்று சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதும், 'இ - பாஸ்' பெற்றும், போலி 'இ - பாஸ்'கள் மூலமும், பலரும் கோவைக்கு வருகின்றனர். இதனால், கடந்த இரு வாரங்களாக கோவை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, வெளிமாநில பகுதிகளில் இருந்தும் அதிகமானோர், பொள்ளாச்சி சுற்றுப்பகுதிக்கு வருகின்றனர். வெளியில் இருந்து வருவோர், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல், குடும்பத்தினரும் சேர்ந்து இருக்கின்றனர். இதனால், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் முழுவதிலும் பல இடங்களில், மாவட்ட எல்லைகள், மாநில எல்லைகளில், போலீசார், சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை. ஒரு நபரின் பெயரில் பெறப்பட்ட 'இ - பாஸ்' பயன்படுத்தி, அந்த குறிப்பிட்ட நபருடன், பலரும் மாவட்ட எல்லைகளை கடக்கின்றனர். பலரும் போலி 'இ - பாஸ்' பயன்படுத்தியும், அரசியல்வாதிகள் செல்வாக்குடன் வருகின்றனர்.அதேபோல், மாவட்ட, மாநில எல்லைகளில் உள்ள சில குறுக்கு வழிகளை பயன்படுத்தி, கோவை மாவட்டத்தினுள் வந்து செல்கின்றனர். பிரதான ரோடுகளில் மட்டுமே கண்காணிப்பு மேற்கொண்டு, குறுக்கு வழித்தடங்களை அலட்சியமாக விட்டு விடுவதால், இப்பிரச்னை நிலவுகிறது.இதனால், கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதுடன், யாரால் பரவியது என்பதை கண்டறிவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.இந்நிலையில், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை கண்டறிய மாவட்ட நிர்வாகம், கொரோனா தடுப்பு குழு துவங்கியுள்ளது. 0422 - 2301114, 0422 - 1077 மற்றும் 94999 33870 என்ற எண்களில் தொடர்பு கொண்டு இக்குழுவுக்கு தகவல் தெரிவிக்க வசதி ஏற்படுத்தியுள்ளது.இக்குழுவுக்கு அதிக அளவிலான மக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இது, வெளியூர்களில் இருந்து பல நபர்கள் வந்துள்ளதை உணர்த்துகிறது.இந்நிலையில், மாநில, மாவட்ட எல்லைகளை கடக்கும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். 'இ - பாஸ்' பெற்று வருவோரை கண்காணிப்பதுடன், உரிய ஆவணங்களின்றி மாவட்டத்தினுள் வருவோரை தடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.உடனே நடவடிக்கை!கொரோனா தடுப்புக்குழு உதவி மைய அதிகாரிகள் கூறுகையில், 'தடுப்புக்குழுவின் எண்களுக்கும், மாவட்ட நிர்வாக தொடர்பு எண்களில், அதிக அளவிலான மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். உதவி மையம், 24 மணி நேரமும் இயங்கும். மக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு, உதவி மையத்தில் தகவல் தெரிவிக்கலாம். தகவலின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X