தக்காளி வரத்து குறைவு; கூடைக்கு ரூ.100 உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி வரத்து குறைவு; கூடைக்கு ரூ.100 உயர்வு

Added : ஜூன் 25, 2020
Share

பொள்ளாச்சி:தக்காளி வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால், 15 கிலோ கூடைக்கு, 100 ரூபாய் விலை உயர்ந்தது.பொள்ளாச்சி காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு, சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, காய்கறி வரத்து உள்ளது. பற்றாக்குறை நிலவும் காலங்களில், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, காய்கறி வரத்து இருந்தது.தற்போது, தக்காளி சீசன் நிறைவடைந்து வரும் நிலையில், நாற்று நடவு துவங்கியுள்ளது. இதனால், பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தேவையும் அதிகரித்து வருவதால், விலை உயர்ந்து வருகிறது.நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, 15 கிலோ எடைகொண்ட கூடை தக்காளி, 400 ரூபாய்க்கு விற்பனையானது. அவரைக்காய் கிலோ, 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் - 10, பச்சைமிளகாய் - 30, பாகற்காய் - 25, பீர்க்கங்காய் - 20, புடலங்காய் - 15, 20 கிலோ எடைகொண்ட முள்ளங்கி பை - 200, சின்னவெங்காயம் -- 25 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தில், தக்காளி கூடை - 300 ரூபாய்க்கு விற்றது. மற்ற காய்கறிகள் விலையில் பெரிய மாற்றம் இல்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X