பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பில்லாத போர்வெல்: மூடுவதற்கு நடவடிக்கை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:அரசு மற்றும் தனியார் இடங்களில், பாதுகாப்பில்லாமல், திறந்த நிலையில் இருக்கும், பயன்பாடில்லாத போர்வெல்களை மூட வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகளுக்குஉத்தரவிட்டது.இந்நிலையில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கிட்டசூரம்பாளையம், கணபதி நகரில் ரோட்டோர தனியார் இடத்தில், போர்வெல் மூடப்படாமல் திறந்து கிடந்தது. சில நாட்களுக்கு முன், ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட ஆட்டுக்குட்டியை மக்கள் காப்பாற்றினர்.புளியம்பட்டி கிராம வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் தரப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணறு மூடி கொண்டு அடைக்கப்பட்டது. ஆழ்துளை கிணறு அமைந்த இடத்தின் உரிமையாளருக்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X