பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை ஏலம்: வரத்து குறைவு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்துக்கு கொப்பரை வரத்து குறைந்தது.வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் பொறுப்பு விஜயகுமார் முன்னிலையில், கொப்பரை ஏலம் நடந்தது.வடக்கிபாளையம், புரவிபாளையம் மற்றும் நடுப்புணி பகுதியில் இருந்து, 19 மூட்டைகளில் கொப்பரை வரத்து இருந்தது.முதல் தர கொப்பரை, இரண்டு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 90 முதல், 92.60 ரூபாய் வரைக்கும்; இரண்டாம் தர கொப்பரை, 17 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோ, 66.30 முதல், 46.65 ரூபாய்க்கு விற்றது. ஏலத்தில், 12 விவசாயிகள், ஐந்து வியாபாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X