பொது செய்தி

இந்தியா

இனி தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றலாம்

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ISRO, Private Sector, K Sivan, ISRO Chief, Build Rockets, Inter Planetary Missions, planetary exploration missions, space activities, satellites, Indian Space Research Organisation, CENTRAL GOVERNMENT

புதுடில்லி: இந்திய தனியார் துறையினர் இனி இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு தேவையான ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் இதர சேவைகள் மேற்கொள்ளலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பிற கிரகங்களுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பும் திட்டத்தில் இனி தனியார் நிறுவனங்களும் பங்கு கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளதாக சிவன் தெரிவித்தார். கடந்த புதனன்று இதற்கான அனுமதியை கேபினட் அமைச்சர்கள் அளித்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோவும் இனி ஒன்றாக பணிபுரியும் என சிவன் கூறியுள்ளார். மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டம் வெகுநாட்களாக விஞ்ஞானிகளால் ஆராயப்படும் திட்டமாகும். அதற்கு தனியார் நிறுவனங்களின் முதலீடு மற்றும் சேவை இன்றியமையாதது என மத்திய அரசு கருதுகிறது. இதனால் இஸ்ரோவுக்கு பல புதிய தொழில்நுட்ப வசதிகள் செய்து தர இயலும் என்பதால் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்தத் திட்டம் காரணமாக எதிர்காலத்தில் ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் தயாரிப்பில் மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படாது. மேலும் வளர்ந்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறை புதிய உச்சத்தை தொடும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நாசாவுக்குப் பிறகு மிகப்பெரிய விஞ்ஞான ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகத் திகழும் இஸ்ரோ, விரைவில் புதிய மைல்கல்லை எட்டும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Natarajan - chennai,இந்தியா
25-ஜூன்-202019:54:41 IST Report Abuse
Ramesh Natarajan நல்ல முடிவு.
Rate this:
Cancel
S. Venugopal - Nagaland,இந்தியா
25-ஜூன்-202017:25:31 IST Report Abuse
S. Venugopal இனி நமது விஞ்ஞானிகள் ஓ பி அடித்துக்கொண்டு காக்காபுடித்து ப்ரோமோஷன் எஸ்ட்டென்ஷன் எல்லாம் பழைய காலம் போல் வாங்கமுடியாது. உழைக்க வேண்டும். அரசாங்கத்தின் பாராட்டப்படவேண்டிய நல்ல செயல்
Rate this:
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
25-ஜூன்-202020:19:38 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் தெரிந்தால் சொல்லுங்கள் இதில் நுழைவது அவ்வளவு ஸியானது இல்லை ஏன் எனில் GATE எக்ஸாம் எழுதிய பிறகுதான் இதில் நுழைய முடியும்...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஜூன்-202017:25:12 IST Report Abuse
Lion Drsekar மிக மிக அருமை இனி செய்வாக்கிகிரஹம் ஒரு ஜாதி கட்சிக்கு சொந்தமாகப் போகிறது, வாழ்த்துக்கள் சுடுகாட்டை தவிர மற்ற அனைத்தையும் இவர்கள் வளைத்துப் போட்டு விட்டார்கள் இனி இது ஒன்றுதான் மீதம் இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X