சீனா-இந்தியா எல்லைப் பிரச்னை; பிரிட்டன் பிரதமர் கருத்து

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
UK PM, Boris Johnson, India-China Face off, Very Serious, Worrying, Boris Johnson, british, london, UK, Prime Minister, Prime Minister's Questions, PMQs, India, China, House of Commons, Conservative Party MP, Flick Drummond, பிரிட்டன், பிரதமர், போரிஸ் ஜான்சன், இந்தியா, சீனா, எல்லை, பிரச்னை

லண்டன்: சீனா-இந்தியா இடையே உள்ள எல்லைப் பிரச்சனைக்கு இருநாடுகளும் கலந்து பேசி சுமூக தீர்வு காணவேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிளிக் டிமாண்ட் கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு பதிலளித்த ஜான்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார். லடாக் பகுதியில் நிலவும் பதற்றம், மிகவும் வருந்தத்தக்க விஷயம் என கூறிய போரிஸ், பிரிட்டன், இந்திய-சீன எல்லையில் நடக்கும் போர் பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.


latest tamil news


முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில், இந்திய-சீன எல்லையில் போர்ப் பதற்றத்தைத் தவிர்க்க இந்தியா முறையான பேச்சுவார்த்தை நடத்திவருகிறது எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 15 அன்று கல்வான் பகுதியில் நடந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் மரணம் அடைந்தனர். முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய-சீன எல்லைப் பிரச்னைக்கு தீர்வுக்கான கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சீனாவை கடுமையாக சாடியிருந்தார். தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக பிரிட்டனும் சுமூக பேச்சுவார்த்தையை நடத்த கோரியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
25-ஜூன்-202020:02:24 IST Report Abuse
வெகுளி சீனாவுக்கு பயந்து ஹாங்காங் மக்களை அம்போ என்று கை விட்டு விட்டு ஓடிய இந்த கோழைகளால் நமக்கு ஒரு பயனும் இல்லை...
Rate this:
Ray - Chennai,இந்தியா
26-ஜூன்-202004:39:13 IST Report Abuse
Rayயாருக்கு பயந்து இந்தியாவை விட்டு ஓடினார்கள் பாஸ் ?...
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
25-ஜூன்-202018:21:55 IST Report Abuse
GMM புலி பசித்தால் புல்லை தீங்காது. பசு போன்ற இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, ஜெர்மன், இஸ்ரேல், ஜப்பான்... போன்று உழைத்து பொருள் தேடும் நாடுகள் ஒருங்கிணைந்து புலியை (சீனா) தனி காட்டில் வசிக்க செய்ய வேண்டும். UN க்கு எல்லை எது என்று தெரியாது. சமாதான பேச்சில் சீனா அடங்காது. விரைவில் முடிவு எடுக்காவிடில் கோரோனா வைரஸ் போன்று உலகு எங்கும் நில ஆக்கிரமிப்பு, கம்யூனிஸ்ட் தீவிர வாதம் பரவும்.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
25-ஜூன்-202017:45:32 IST Report Abuse
Balasubramanian Ramanathan இவனுகளும் நம் நேருவும் சேர்ந்து அடிச்ச கூத்துதான் இன்னிக்கு நாம் அனுபவசிக்கிட்டு இருக்கோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X