பொது செய்தி

இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கிய சீன படைகள்?

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
india, china, army, galwan valley, eastern ladakh, galwan area, india-china face off, chinese army, indian army, ladakh, Indian military personnel,  Line of Actual Control, LAC, People's Liberation Army, South Xinjiang region, Major General Liu Lin,  PLA, கல்வான் பகுதி, இந்தியா, சீனா, ராணுவம், வீரர்கள், வாபஸ்

புதுடில்லி: லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன படைகள் பின் வாங்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்நாடு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இதனை குறைப்பதற்காக இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், கல்வான் பகுதியில் சீன ராணுவம் பின் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 22ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் போது, கல்வான் பகுதியில் இருந்து தங்கள் வீரர்கள் பின்வாங்கி செல்வார்கள் என சீன ராணுவம் தெரிவித்ததாகவும், அதன்படி சில வீரர்கள் மற்றும் வாகனங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,இந்தியா
25-ஜூன்-202020:25:39 IST Report Abuse
vns சீனா இப்போது ஒரு போரை விரும்பாது.. அப்படி ஓர் போர் வந்தால் சீனாவின் பல எல்லைகள் துண்டிக்கப்படும். மியான்மார், வியட்நாம், பில்லிபீன்ஸ், இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகள் சீனாவின் பல எல்லைகளை தாக்குவார்கள் சீன துண்டு துண்டாகவும் வழி உள்ளது.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-ஜூன்-202018:24:14 IST Report Abuse
மலரின் மகள் போட்டோவை கவனியுங்கள். சீன ராணுவத்தை பற்றி நான் தொடர்ந்து மலரில் எழுதிவருவதன் உண்மையை பிரதிபலிக்கும். முதலில் நமது ராணுவ வீரர்களின் தகுதி, குறிப்பாக உடல் தகுதி உயரம், எடை. கம்பீரமாக நிற்கும் அழகு. சீன காலாட்படையினருடன் ஒப்பு நோக்குங்கள். சகட்டு மேனிக்கு இருப்பார்கள். முகத்தில் எப்போதும் அவர்களின் தேசத்து தலைமையை போலவே சிடு சிடு என்று இருப்பார்கள். உடல் தகுதியோ, சரியான எதையோ கம்பீரமோ கிடையாது. மக்களை அடக்கி ஆளுவதற்காக ஏற்பாடு செய்து கொல்லப்பட்ட ஒரு ஆர்மி ஆகத்தான் அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு மிக குறைந்த ஊதியம் என்று பல்வேறு ஆங்கில செய்திகளில் வந்திருக்கிறது. அசையாமல் ஒரே இடத்தில் பல மணி நேரங்களில் பயந்து போய், சென்னை தங்க கடற்கரையில் சிலை போன்று நின்றிருக்கும் சிலை மனிதனை போலவே இருப்பார்கள். அது தான் அவர்கள் லட்சணம். அதற்காகத்தான் மேலை நாடுகளிடமிருந்து எப்படியோ அவர்கள் பணம் பெருமளவில் கொடுத்து பல தொழில் நுட்பங்களை திருடி கொண்டார்கள் அதன் மூலம் அணு ஆயுதம், ஏவுகணைகள். அதை மட்டுமே வைத்து கொண்டு தான் உலகில் ஜம்பம் அடித்து கொண்டிருப்பார்கள். நேரடி யுத்தத்தில் இன்றைய நிலையில் முதலில் புறமுதுகிட்டு ஓடுபவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள். நீளம் தாண்டுதல் உயரம் தான்துழ்தலில் அவர்கள் சிறப்பானவர்கள் அல்ல. ஆனால் வேகமாக ஓடுவதில் முன்னோக்கி வந்த வேகத்தை விட பின்னூகி ஓடும் வேகம் அதிகம் இருக்கும் என்று ஐ நா அமைதிப்படையை இவர்கள் பங்களிப்பின் போடு நடந்த சில தீவிரவாதிகளுடனாந யுத்தத்தை மேற்கோள்காட்டில் பல செய்திகள் வரலாறுகள் உண்டு. ஜெய் ஜவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X