கொரோனா வைரஸ் தாக்கி உயிர் பிழைத்த 114 வயது முதியவர்

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
114 Year Old, Ethiopia, Recovers, CoronaVirus, corona, covid-19, covid-19 pandemic, corona in ethiopia, coronavirus patient, 114-year-old man, corona recovery, எத்தியோபியா, முதியவர், கொரோனா, பாதிப்பு, மீட்பு, டிஸ்சார்ஜ்

அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவை சேர்ந்த 114 வயது முதியவர் ஒருவருக்கு பிப்ரவரி மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அதன் பாதிப்பில் இருந்து அவர் முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

சீனாவின் வூகானில் கிளம்பிய கொரோனா வைரஸ் இன்று உலகில் நுழையாத இடங்களே இல்லை. உலகம் முழுவதும் பரவி உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இவ்வைரஸ் ஆட்கொல்லி போன்றது என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 114 வயது தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளார்.


latest tamil news


இந்த தகவலை எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் மருத்துவமனை நடத்தி வரும் யாரெட் அகிடேவ் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பிப்ரவரி மத்தியில் தனது மருத்துவமனையில் முதியவர் சேர்க்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் பூரணமாக குணமடைந்து நலமுடனும், நல்ல ஆயுளுடனும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எத்தியோப்பியாவில் இதுவரை 5,000 பேருக்கு கொரோனா உள்ளது. 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
25-ஜூன்-202018:44:37 IST Report Abuse
Nathan மனிதனின் பூரண ஆயுள் 116 என கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த பெரியவர் 114 வயதில் மாபெரும் மாரியிலிருந்து மீண்டார் என்றால் அதிசயமே. அந்த வைரஸும் நுரையீரலில் இடம் பிடிக்க பார்த்து, யக், ஒரு ருசியுமில்லய், என வைது விட்டு, உடைந்து போயிருக்குமோ. பலே பெரியவரே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X