சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு : கொரோனா சீல் வைத்த இடத்தில் சோகம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு : கொரோனா சீல் வைத்த இடத்தில் சோகம்

குன்னூர்: கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்திய ஏரியாவில், கீழே விழுந்தவரை தொட்டில் கட்டிமருத்துவமனைக்கு தூக்கி செல்வதற்குள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

அருவங்காட்டில் உதயம் நகரில் ஒருவருக்கு தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த பகுதியை சேர்ந்த லட்சுமியம்மாள், 67 என்பவர் தவறி விழுந்து காயமடைந்தார் ஸ்டெரச்சர் இல்லாததாலும், அருவாங்காடு தொழிற்சாலை குடியிருப்பு கேட் பூட்டப்பட்டதாலும், இவரை தொட்டில் கட்டி 400 மீட்டர் தூரம் மேடான ஒற்றையடி பாதையில், சிரமத்துடன் சுமந்து சென்றனர். ஆனால் அதற்குள் உயிரிழந்தார். குன்னூர் அரசுமருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டிற்கு கொண்டு வராமல் நேரடியாக புதைக்க கூறப்பட்டது. பாதுகாப்பு உடைகள் அணிந்தவர்கள் மூலம் கொண்டு சென்று புதைக்க அறிவுறுத்தப்பட்டது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X