பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா; மொத்தம் 70,977 பேர் பாதிப்பு

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
CoronaVirus, Corona Cases, Tamilnadu, Discharge, TN_Corona Updates, TN_Health, TN Fights Corona, Corona, TN Govt, Covid-19, Positive Cases, coronavirus outbreak, covid-19 pandemic, health, disease, corona patients, corona spread, tn news, tn district, Corona in TN, TN fights corona, india, new coronavirus cases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 25) புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆகவும், பலி எண்ணிக்கை 911 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 151 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 70,977 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 88 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,543 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 10,08,974 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.


latest tamil news


இன்று அரசு மருத்துவமனையில் 29 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் என 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 30,064 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
26-ஜூன்-202018:09:48 IST Report Abuse
unmaitamil நோய் தொற்றயும் விரைவில் கூடுதலாக பரப்பி, உன்னால் முடிந்த துரோகத்தை தமிழ்நாட்டுக்கு செய்யலாம். விரைவில் செய்வீரா ???
Rate this:
Cancel
26-ஜூன்-202005:59:09 IST Report Abuse
இவன் வீட்டில் இரு னு சொன்னப்ப, ஒன்றிணைவோம் வா னு சொன்னது யாரு
Rate this:
Cancel
25-ஜூன்-202020:04:42 IST Report Abuse
R. SUBRAMANIAN ஒன்றிணைவோம் வா(?)😢
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X