சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

அறிவியல் ஆயிரம்

கோபம் குறைக்கும் ஊஞ்சல்


விழாக்களில் ஊஞ்சல் ஆடுவது வடஇந்திய வழக்கம். தமிழகத்தில் சில திருமண நிகழ்வில் ஊஞ்சல் வைபவம் முக்கியம். ஊஞ்சல் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் எழுகின்றன. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்குகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி ஊஞ்சலின் இருபக்க சங்கிலிகளையும் பிடித்து ஆடும்போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் பாய்ந்து மூளை புத்துணர்ச்சி பெறுகிறது. முதுகுத்தண்டு பலம் பெறுவதால் கழுத்துவலி குறையும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் குறையும்.


தகவல் சுரங்கம்

போதைப்பொருள் ஒழிப்பு தினம்


சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் விதமாக ஜூன் 26ல் சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் கோடி
ரூபாய் அளவுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது. இதை தடுத்து ஒழிக்க, சட்டங்கள் மூலம் அனைத்து நாடுகளும் முயற்சிகள் எடுக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X