கர்நாடகா, தெலுங்கானாவில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு| Telangana, Karnataka COVID-19 cases cross 10,000-mark | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்நாடகா, தெலுங்கானாவில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020
Share
karnataka, telangana, corona, positive cases, new coronavirus cases, 10,000 cases, coronavirus, covid-19, covid-19 pandemic, corona news, corona patients, india, indian states, corona spread, coronavirus outbreak, corona in karnataka, corona in telangana, india fights corona, corona deaths, கர்நாடகா, தெலுங்கானா, கொரோனா, பாதிப்பு, பலி, 10,000, கடந்தது

ஐதராபாத்: கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது.

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 894 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 10,444 ஆனது. கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 4,361 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.


latest tamil news



கர்நாடகாவில் ஒரே நாளில் 173 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,118 ஆக உள்ளது. மாநிலத்தில் 164 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை 6,151 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்று முதல்வர் எடியூரப்பா மாநில அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு கொரோனா நிலை குறித்து பேசினார். கூட்டத்தில் பேசிய எடியூரப்பா கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X