சீன பொருட்கள் புறக்கணிப்பு ; தீவிரமாகும் பிரசாரம்

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

புதுடில்லி : சீன பொருட்களை புறக்கணிப்பதுடன், டில்லியின் ஹோட்டல் மற்றும் விருந்தினர் மாளிகைகளில் சீனர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா இடையேயான மோதலில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் தொடர்ந்த அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீன பொருட்களை இந்தியர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் தரமற்ற பொருட்களை தவிர்த்து, நமது நாட்டில் உற்பத்தியை அதிகரித்து, இந்திய பொருட்களை பயன்படுத்துமாறும் பலதரப்புகளும் கோரிக்கை விடுத்து வருகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மற்றும் தரமில்லாத பொருட்களையும், இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்துங்கள் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டவர்களும் கூறியிருந்தனர். தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன் அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பினர், சீன பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.


latest tamil news



மேலும் டில்லியில் சீன பொருட்களை தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தினர். இதனை யொட்டி, டில்லியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகை போன்றவற்றில் இனி சீனர்களுக்கு அனுமதி கிடையாது. அங்கு பயன்படுத்தப்பட்ட சீன பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என டில்லியின் ஹோட்டல் மற்றும் விருந்தினர் மாளிகையின் பொது செயலாளர் மகேந்திர குப்தாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்ததாக டில்லியின் பெரிய ஸ்டார் ஹோட்டல்களையும் தொடர்பு கொண்டு இந்த திட்டத்தில் சேர அழைப்பு விடுக்க வுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 10 ல் சீன பொருட்களை புறக்கணிக்க ஒரு தேசிய பிரசாரம் தொடங்கப்பட்டது. 'இந்தியன் குட்ஸ் - எங்கள் பெருமை' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பிரச்சாரம், 2021 டிசம்பருக்குள் சீன உற்பத்தி பொருட்களின் இறக்குமதியை 1 டிரில்லியன் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று CAIT ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் சீன பொருட்களை புறக்கணித்து, இந்தியாவின் தயாரிப்புகளை விற்று, வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூன்-202007:10:18 IST Report Abuse
தல புராணம் // 2021 டிசம்பருக்குள் சீன உற்பத்தி பொருட்களின் இறக்குமதியை 13 பில்லியன் அமெரிக்க டாலர் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது -
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூன்-202006:47:17 IST Report Abuse
தல புராணம் அவர்களுக்கு தங்க இடம் மறுக்கிறார்கள் என்றால் நாட்டுக்கு உள்ளே வர அனுமதி கொடுத்தது யார்?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-ஜூன்-202004:34:02 IST Report Abuse
Mani . V இதை கூட சொல்ல சீன தயாரிப்புகளையே (போன், லாப்டாப்) பலரும் பயன்படுத்துகிறார்கள். அது சரி, ஓவர் நைட்டில் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது மாதிரி, அரசு இந்த சீன தயாரிப்புகளுக்கு தடை விதிக்க முடியாதுங்களா யுவர் ஹானர்?
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூன்-202007:57:09 IST Report Abuse
தல புராணம்அதுக்கு அம்பானியும், அதானியும் பெர்மிஷன் தரவில்லை.. ஆனா .. நீங்கள் கரடி பொம்மை வாங்க கூடாது.. கோர்ட் ஆறு மாசத்துக்கு அட்ஜர்ண்ட் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X