ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

அமராவதி : ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 477 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. தற்போது மாநிலத்தில் நோய் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 19,085 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 477 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 10,884 ஆக உயர்ந்தது. 7 பேர் புதிதாக பலியாகினர். இதுவரை மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்தது.


latest tamil news



ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 118 பேர் குணமடைந்தனர். நோய் தொற்றுக்கு தற்போது 5,760 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று வரை 4,988 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் கர்னூல், கிருஷ்ணா மற்றும் குண்டூரில் தலா 2 பேர் மற்றும் கிழக்கு கோதாவரியில் ஒருவரும் அடங்குவர். ஆந்திராவின் 13 மாவட்டங்களைசேர்ந்தவர்கள் புதிதாக பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அதன்படி, கர்னூலில் 72 பேர், குண்டூரில் 67 பேர், கிழக்கு கோதாவரியில் 64 பேர் ஆகும். மேலும் வெளி மாநிலம் மற்றும் பிறநாடுகளில் இருந்தும் திரும்பியவர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூன்-202006:42:50 IST Report Abuse
தல புராணம் // திருப்பதியில் நாளை முதல் மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி //
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X