2036 வரை புடின் அதிபர்; அரசியல் சாசன திருத்த ஓட்டெடுப்பு தொடங்கியது!

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Putin,Vladimir Putin, Russia, President Vladimir Putin, Russian president,  Central Election Commission, CEC, ELECTION, POLLS, PUBLIC VOTES, புடின்,விளாதிமிர் புடின்

மாஸ்கோ: 20 ஆண்டுகளாக ரஷ்ய அதிபராக தொடரும் புடின், தன்னையே அடுத்த இரண்டு முறையும் அதிபராக தேர்வு செய்யும் வகையில் அரசியல்சாசன திருத்தம் கொண்டு வந்து இன்று (ஜூன் 25) ஓட்டெடுப்பை தொடங்கியுள்ளார்.

ரஷ்ய அதிபர் பதவிக் காலம், ஆறு ஆண்டுகள். அந்நாட்டு அரசியல் சாசனப்படி, ஒருவர், இரு முறை மட்டுமே தொடர்ந்து அதிபராக நீடிக்கலாம். அதன்படி, 2008 வரை, இரு முறை தொடர்ந்து அதிபராக இருந்த, புடின், அதன் பின், பிரதமராக பதவி வகித்தார். பின், 2012ல் மீண்டும் அதிபர் பொறுப்புக்கு வந்த அவர், 2018 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக் கொண்டார். இவர் பதவிக் காலம், 2024ல் முடிகிறது. அதன் பிறகு பதவியில் தொடர சட்டத்தில் இடமில்லாமல் இருந்தது.


latest tamil news


இந்த நிலையில் கடந்த ஜனவரியில் அரசியல்சாசன சட்டத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அதில் 2024-க்கு பிறகு அடுத்த இரண்டு முறையும் தானே அதிபராக தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றம் செய்துள்ளார். மேலும் நீதிபதிகள், வழக்கறிஞர்களை நியமிக்கும் அதிகாரமும் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இச்சீர்திருத்தத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது. ஏப்ரல் 22-ல் இதற்கான பொது ஓட்டெடுப்பு நடைபெற இருந்தது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஓட்டெடுப்பு தடைபட்டது.


latest tamil news



பின்னர் ஜூலை முதல் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முன் கூட்டியே இன்று (ஜூன் 25) ஓட்டெடுப்பு துவங்கியது. கொரோனா பரவலை தடுக்க கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் முன் கூட்டியே ஓட்டெடுப்பை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சீர்திருத்தம் புடினை வாழ்நாள் அதிபராக்க அனுமதிக்கும் என அரசின் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூன்-202007:12:59 IST Report Abuse
தல புராணம் அந்த ஓட்டு இயந்திரம் இங்கே கிடைக்குமா? மோடி அண்ட் கோ வின் மைண்ட் வாய்ஸ்
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
26-ஜூன்-202001:00:14 IST Report Abuse
Rajesh இதெல்லாம்................ அடுத்த நொடி மூச்சுக்காற்று இருக்குமான்னு சொல்லமுடியாது..............
Rate this:
Cancel
Raman - Lemuria,இந்தியா
25-ஜூன்-202023:31:19 IST Report Abuse
Raman ஒரு முறை கம்ம்யூனிச ஆட்சி முறைக்கு சென்ற பின்னர் அதில் இருந்து வெளியே வந்து ஜனநாயகம் அமைப்பது எளிதல்ல ... சர்வாதிகாரிகள் ஏதோ ஒரு வடிவில் அந்த நாட்டை ஆண்டு கொண்டே இருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X