அரசியல் செய்தி

தமிழ்நாடு

நோயை வைத்து அரசியல் : ஸ்டாலின் மீது இ.பி.எஸ்., பாய்ச்சல்

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
நோயை வைத்து அரசியல் , ஸ்டாலின்,இ.பி.எஸ்., பாய்ச்சல்

கோவை :''இந்தியாவிலேயே நோயை வைத்து, அரசியல் நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும் தான்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார்.

கொரோனா தடுப்பு மற்றும் அரசு வளர்ச்சித் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், கோவையில் நேற்று, முதல்வர், இ.பி.எஸ்., தலைமையில் நடந்தது. இதன் முடிவில், முதல்வர் அளித்த பேட்டி:நான் சேலம் மாவட்டம் சென்று ஆய்வு செய்தபோது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், 'சேலம் மட்டும் தான் முதல்வர் கண்ணுக்கு தெரிகிறதா, தமிழகம் முழுதும் கண்ணுக்கு தெரியவில்லையா' என்றார்.



தினமும் அறிக்கை



இன்று கோவை மாவட்டம் வந்துள்ளேன். ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அங்கு நடக்கும் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன். கொரோனா தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறேன்.
தமிழகம் முழுதும் கொரோனா தொற்று பரவல் தடுக்க, அரசு தொடர் முயற்சி எடுக்கிறது. 'நோய் தொற்று தடுக்க, அரசு எதுவும் செய்யவில்லை' என ஸ்டாலின் தினமும் அறிக்கை வெளியிடுகிறார். இந்தியாவிலேயே நோயை வைத்து, அரசியல் நடத்தும் ஒரே தலைவர், அவர் மட்டும் தான்.ஸ்டாலின், தன் கட்சியினரை நிவாரணம் வழங்கும்படி கூறினார்.
'நேரடியாக போக வேண்டாம்; அதிகாரிகளிடம் பொருட்களை ஒப்படையுங்கள். அவர்கள் நிவாரணம் வழங்கட்டும்' என, நிபுணர்கள் கூறியதை நானும் தெரிவித்தேன்.
ஆனால், அப்படி செய்யாமல், நீதிமன்ற உத்தரவு பெற்று, அவர்களே நிவாரணம் வழங்கினர். அதுவும் அங்கொன்றும், இங்கொன்றுமாக வழங்கினர்.


முடிவுகள் அறிவிப்பு



எந்த விதிமுறையும் பின்பற்றாமல் நிவாரணம் வழங்கியதால் மட்டுமே, 500 பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டது.நிபுணர்கள் கூறிய அறிவுரையை கேட்டிருந்தால் ஒரு, எம்.எல்.ஏ.,வை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனைகள் நடக்கின்றன.
நேற்று முன்தினம் மட்டும், 32 ஆயிரம் பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
இறப்பு சதவீதம் குறைத்திருக்கிறோம். 'ஊரடங்கு உத்தரவால், 90 நாள் வீணாக்கி விட்டனர்' என்றும் ஸ்டாலின் கூறி வருகிறார். அந்த ஊரடங்கால் தான், தொற்று தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.இந்த, 90 நாட்களில் அரசுத்துறை பணியாளர்கள் முழு வீச்சில் பணியாற்றிய காரணத்தால் தான் உயிர் இழப்பை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின், பள்ளி தனித்தேர்வுகள் தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு, முதல்வர் கூறினார்.



டி.ஜி.பி.,க்கு அறிவுரை



முதல்வர் கூறியதாவது:சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக, டி.ஜி.பி.,யிடம் அறிவுரை கூறியுள்ளேன். இது, சோதனையான நேரம். இந்த நேரத்தில் வியாபாரிகளிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என சொல்லியிருக்கிறேன்.
சம்பவம் தொடர்பாக, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்துள்ளது. உயர் நீதிமன்ற கிளை, தானாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரிக்கிறது. உயர் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதன்படி அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
26-ஜூன்-202021:40:49 IST Report Abuse
sankar 'இந்தியாவிலேயே நோயை வைத்து, அரசியல் நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும் தான்,''- சபாஷ் சரியாக சொன்னீர்கள் முதல்வரே
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
26-ஜூன்-202021:35:08 IST Report Abuse
Girija கொரோனா தடுப்பு விளம்பரத்திற்காக பொதுவாழ்க்கையில் அசிங்கமாக உள்ள சிரிப்பு நடிகர்களை பயன்படுத்த வேண்டாம் .
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
26-ஜூன்-202013:31:02 IST Report Abuse
Visu Iyer இவர்கள் பணி சிறப்பானது தான் என்றால்.. அதை ஒரு முதல்வர் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.. ஒரு துளியும் இல்லை.. மக்களே அதை சொல்லுவார்கள்.. முதல்வர் நாற்காலி என்பது அரசியல் பேசும் மேடை அல்ல... பணி செய்யும் வாய்ப்பு தான் பதவி... பதவி, பவிஷு, படாடோபம் எல்லாம் ஒரு நாள் ஊதிய பலூனை போல வெடித்து விடும்.. என்பது சிலருக்கு இன்னமும் புரியவில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X