சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

சீறும் சிங்கம்!

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 சீறும் சிங்கம்!

சீறும் சிங்கம்!

'பார்ப்பதற்கு அமைதியானவர் போல் தோற்றமளிக்கிறார்; ஆனால், இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறாரே...' என, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டாவை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள். நட்டா, இருக்கும் இடம் தெரியாமல் அரசியல் செய்யும் ஆர்ப்பாட்டமில்லாத அரசியல்வாதி. தலைபோகிற பிரச்னை என்றாலும், 'டென்ஷன்' ஆகாமல், அமைதியாகத் தான் பேசுவார். ஆனால், சமீபகாலமாக, அவரது பேச்சில் ஆக்ரோஷமும், ஆவேசமும் கொப்பளிக்கிறது. சீனாவுடனான எல்லை பிரச்னையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவும், ராகுலும், பிரதமரையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து
வருகின்றனர். வழக்கமாக இதுபோன்ற நேரங்களில், மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர், முக்தார் அப்பாஸ் நக்வி போன்றோர் தான் பதிலடி கொடுப்பர். தற்போது நட்டாவே களத்தில் இறங்கியுள்ளார். 'நீண்ட காலமாக அதிகாரத்தை அனுபவித்த, 'மன்னர் குடும்பம்' இப்போது அதிகாரம் கையை விட்டு போனதால், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளது. இவர்களுக்கு நாட்டுப் பற்றே இல்லை' என, எகிறியுள்ளார் நட்டா. இதைக் கேட்ட, பா.ஜ., மூத்த நிர்வாகிகள், 'அமைதியாக இருந்தால் அரசியல் செய்ய முடியாது என, நட்டாவுக்கு யாரோ அறிவுறுத்தியுள்ளனர். அதனால் தான், துாங்கி கிடந்த சிங்கம், இப்போது சீறுகிறது' என, 'கமென்ட்' அடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
26-ஜூன்-202016:22:12 IST Report Abuse
Endrum Indian காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவும், ராகுலும்??நான் நெனச்சேன் தலைவர் என்றால் ஒருவர் தான் என்று அப்போ இது ரெண்டு தலை நாகமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X