சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது தான், மத்திய அரசின் சாதனையா?

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இது தான், மத்திய அரசின் சாதனையா? பா.-விஜய், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு பக்கம், 'கொரோனா' தொற்றிக் கொள்ளுமோ என்ற பயம்; மறுபக்கம், ஊரடங்கால் வருமானமின்றி தவிப்பு என, மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இதில், 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல' இருக்கிறது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு.கச்சா எண்ணெய் பீப்பாய், அடிமாட்டு

இது தான், மத்திய அரசின் சாதனையா?

பா.-விஜய், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு பக்கம், 'கொரோனா' தொற்றிக் கொள்ளுமோ என்ற பயம்; மறுபக்கம், ஊரடங்கால் வருமானமின்றி தவிப்பு என, மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இதில், 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல' இருக்கிறது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு.கச்சா எண்ணெய் பீப்பாய், அடிமாட்டு விலைக்கு விற்கப்படும்போதும், நம் நாட்டில், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது, நியாயமா?கடந்த, 17 நாட்களில், சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு, 7.50 ரூபாய் மற்றும் டீசல், 8.55 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்ற, ஆறு ஆண்டுகளில், பெட்ரோல் மீதான கலால்வரி, 258 சதவீதமும்; டீசல், 820 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளதாம்... இதன் மூலம், மத்திய அரசு ஈட்டிய வருவாய், 18 லட்சம் கோடி ரூபாயாம்!
இது தான், மத்திய அரசின் சாதனையா? நம் நாட்டில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது, 82 நாட்களுக்கு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஜூன் 7ம் தேதி முதல், இரண்டு எரிபொருட்களின் விலையும், தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.அடிபட்ட பாம்பாக, மிதிபட்ட எலியாக வாழ்வுக்கும், சாவுக்குமிடையே மக்கள் உயிர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும், எரிபொருள் மூலம் வருமானம் ஈட்ட நினைப்பது, நியாயமில்லை தானே!
எவ்வளவு அடித்தாலும் தாங்குவதற்கு, மக்களின் வாழ்க்கை ஒன்றும், சினிமா காமெடி அல்ல. பஞ்சத்திலும், பசியிலும் வாடும் பரம ஏழைகளான நாங்கள், ஏற்கனவே செத்துக் கொண்டிருக்கிறோம்; எங்களை மேலும் கொல்லாதீர்... 'ப்ளீஸ்!'


தொட்டால்'ஷாக்'அடிக்கணும்!மா.மனோகரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகில் உள்ள, ஒரே ஹிந்து நாடு என்ற உயரிய மரியாதைக்காக, தோழமை பாச உணர்வோடு, பல்லாண்டுகளாய் பழகி வந்த இந்தியாவை, தற்போது, சீனாவின் தோளில் சாய்ந்தபடி, நேபாளம், நம்மிடம் வாலாட்டுகிறது. எல்லைகோடு வரைபடங்கள் விஷயத்தில், நம்மை சீண்டிப் பார்க்கும் நேபாளத்திற்கு, பதிலடி கொடுக்க வேண்டும். மேலும், யார் உண்மையான தோழன் என்பதையும், புரிய வைக்க வேண்டும்.சில மாதங்களுக்கு முன், மகாபலிபுரத்திற்கு சிரித்தபடியே வந்து, நம் பிரதமருடன் தேநீர் அருந்திச் சென்ற, சீன அதிபர், தற்போது எல்லையில் அத்துமீறலில் ஈடுபடுகிறார்.இந்திய எல்லைப் பகுதியான, கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரும்புத்தடி, முள்கம்பி ஆகியவற்றால், சீன ராணுவத்தினர் கொடூரமாக தாக்கியதில், இந்திய வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தது, நம் மனதில் ஆறா துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.எல்லையோர கோட்டுப் பகுதியில், ஆயுதங்கள் உபயோகிக்கக் கூடாது என்ற நடைமுறை, இருநாட்டு உடன்படிக்கையில் இருக்கிறது என்றால், சீன ராணுவத்தினர் மட்டும், எப்படி ஆயுதங்களை பயன்படுத்தினர்?சீனாவிற்கு எதிராக, சமயோஜிதமாக செயல்பட வேண்டும். உலக நாடுகளிடையே, சீனாவை தனிமைப்படுத்த வேண்டும். ஏற்கனவே, 'கொரோனா' வைரஸ் பரப்பிய விவகாரத்தில், உலக நாடுகள், சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன; அதை, இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.சீனப் பொருட்களை வாங்கி விற்பதை, நம் வணிகர்கள் அடியோடு தவிர்க்க வேண்டும். எந்த ஒரு சீன பொருளும், இனி நம் வீட்டிற்குள் நுழையக் கூடாது. சீன பொருட்களுக்கு எதிரான, இந்த உத்வேகம், ஆவேசம் எல்லாம், சில மாதங்களுக்கு மட்டும், இந்தியர்கள் மனதில் நிழலாடி, பின் மறைந்துவிடும்; அது தான், நம் பலவீனம்!இதற்கு, மத்திய அரசு தான், நிரந்தர முடிவு கட்ட வேண்டும். இனிமேல், சீனப் பொருட்கள் விற்பனைக்கும், இறக்குமதிக்கும் தடை விதிக்க வேண்டும்.
சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள தொலைத்தொடர்பு, ரயில் போக்குவரத்து போன்ற, பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு திட்டங்களையும், எந்தவித தயக்கமுமின்றி, உடனடியாக நிறுத்த வேண்டும். மாபெரும் சந்தையான இந்தியாவிற்கு உதவ, முதலீடு செய்ய, ஏராளமான நாடுகள் ஆர்வமாக உள்ளன.'இந்தியாவை சீண்டினால், கண்டனம் மட்டும் தெரிவிக்கும்' என்ற எண்ணத்தில் இருக்கும் நாடுகளுக்கு, 'தொட்டால், 'ஷாக்' அடிக்கும்' என்ற அச்ச உணர்வு ஏற்படச் செய்ய வேண்டும்.


இ.பி.எஸ்., ஆட்சியின்'ரிசல்ட்!'என்.சேகு மகதுாம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., வரும் சட்டசபைத் தேர்தலில், 180 இடங்களில் போட்டியிட வேண்டும் என, அக்கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனராம்... இருக்கத் தானே செய்யும். அக்கட்சியும், எத்தனை நாளைக்கு தான், காங்கிரசை சுமப்பது?முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., காலத்து, அ.தி.மு.க.,வும், காங்கிரசும் அமைத்தது தான், இயற்கையான கூட்டணி. அதன்பின், ஜெ., தலைமையிலான, அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி. 2011 தேர்தலில், கூட்டணி கட்சியான, தே.மு.தி.க.,வின் வெற்றிக்கு, அ.தி.மு.க.,வினர் முழு மனதுடன் தேர்தல் பணியாற்றினர். அதன் பலனாக, எதிர்க்கட்சி அந்தஸ்தை, அக்கட்சி
பெற்றது.கூட்டணி தர்மத்தில், அ.தி.மு.க.,வினர் எப்போதும் நியாயமாக நடந்துக் கொள்வர். ஆனால், தி.மு.க.,வினர் அப்படி அல்ல. காங்., போட்டியிடும் இடங்களில், ஏனோ தானோ என்று தான், அவர்கள் வேலை பார்த்தனர்.ஜெ., இல்லாத நிலையில், அ.தி.மு.க., கட்சியையும், ஆட்சியையும், இ.பி.எஸ்., கட்டுக்கோப்பாக நடத்திச் செல்கிறார். இதற்கு, ஜெ., அமைத்துக் கொடுத்த, கட்சி கட்டுப்பாடு தான் காரணம். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டது, இ.பி.எஸ்.,சின் புத்திசாலித்தனம்.
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவிடம் வீழ்ந்த, தி.மு.க., வரும் தேர்தலில், இ.பி.எஸ்.,சிடம் தோல்வியை தழுவுமா அல்லது லோக்சபா தேர்தல் போல, வெற்றி பெறுமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.இ.பி.எஸ்., தலைமையிலான ஆட்சிக்கு, மக்கள் தரும் மதிப்பெண்கள் தான், வரும் தேர்தலில், அ.தி.மு.க., வின், 'ரிசல்ட்!'

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
26-ஜூன்-202007:57:06 IST Report Abuse
venkat Iyer .இன்று மூலிகை பொருட்களாகட்டும்.ஊட்டமேற்றிய உணவுப்பொருட்களை தயாரிக்க அடிப்படைப் பொருட்களை விலை குறைவாக இறக்குமதிப் பொருட்களை சைனாவில் மட்டும்தான் செய்யமுடியும்.அதோடு கிடைக்கும் சூழ்நிலையும் இருக்கின்றது.நாம் இறக்குமதி செய்யக்கூடாது என்று கொள்கை முடிவு எடுத்தால் நமது மருத்துவத்துறை மற்றும் உணவுத் துறையில் ஏற்றுமதி முப்பது சதவீதம் வாய்ப்பினை நிச்சயம் இழந்துவிடுவோம். இதனை உறுதியாக நான் தெரிவிக்கின்றேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X