சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'போலீசாரும், தி.மு.க.,வினருக்கு ஆதரவாக செயல்படுவது போலல்லவா இருக்கிறது, நீங்கள் சொல்வது...' என, விரக்தியை வெளிப்படுத்தும் வகையில், தமிழக பா.ஜ., மாநில செயலர் பேராசிரியர் சீனிவாசன் அறிக்கை: மதுரை, தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி, கொலை மிரட்டல் காட்சிகள், கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது. ஆட்சியில் இல்லாத போதே, இவ்வளவு வன்முறை என்றால், ஆட்சியில் இருந்தால், எண்ணவே முடியவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?


'இந்த விவகாரத்தில் பல ரகசியங்கள் உள்ளன. படிப்படியாக அனைத்தும் வெளிவரும்...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:
சாத்தான்குளத்தில் இறந்த தந்தை, மகன், உடல்நலக்குறைவால் இறந்தனர் என்கிறார், முதல்வர் இ.பி.எஸ்., பிறகு ஏன், போலீசார் மூவரை, பணியிடை நீக்கம் செய்துள்ளார்? இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு ஏன் அனுப்பப்பட்டுள்ளார்?



'பா.ஜ.,வைச் சேர்ந்த நீங்கள் பாராட்டியதால் தான், இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் வி.முரளிதரன் அறிக்கை:
இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அனுமதி அளிப்பு மையம் துவக்க உத்தரவிட்டுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். இதனால், இந்தியாவின் விண்வெளி திறன் மேலும் மேம்படும்.



'சமூக விலகலுடன் நடைபெற்றது என்பதில் என்ன பெருமை இருக்கிறது; இந்த ஊரடங்கு சமயத்தில், அமைதி காத்திருந்தால் தான் இன்னும் சிறப்பு...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை:
உடுமலை சங்கர் கொலை வழக்கில் நீதி கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ஆதி தமிழர் பேரவை மற்றும் திராவிட, தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், தனிநபர் விலகலுடன் நடைபெற்றது.



'ஓகோ... அதனால் தான், இந்தியாவின் முன்னேற்றம் குறித்து, அந்த கட்சிகள் கவலைப்படுவது கிடையாதோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் பிரிந்த போது, சீன ஆதரவு கம்யூனிஸ்டுகள், ரஷ்ய ஆதரவு கம்யூனிஸ்டுகள் என்று தான் பிரிந்தனர். இந்திய ஆதரவு கம்யூனிஸ்டுகள் கிடையாது.



'நியாயமான கோரிக்கை தான். ஊரடங்கு சமயத்தில், போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டதன் எதிரொலி தான் இந்த குற்றம் என, நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் கனிமொழி அறிக்கை:
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், போலீசார் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தந்தை, மகனுக்கு, தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். அந்த படுகொலை குறித்து, முறையாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X