சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

நிவாரண பொருட்களை பதுக்கிய தி.மு.க.,வினர்!

Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 நிவாரண பொருட்களை பதுக்கிய தி.மு.க.,வினர்!

நிவாரண பொருட்களை பதுக்கிய தி.மு.க.,வினர்!

''கூடுதல் நிதி ஒதுக்கி, கட்டுமான பணிகள் நடந்துண்டு இருக்கு ஓய்...'' என, தன் வீட்டில் சங்கமித்த பெரியவர்களுக்கு, காபி வழங்கியபடியே, பேச்சை ஆரம்பித்தார், குப்பண்ணா.
''எந்த கட்டடத்தைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''மதுரை கலெக்டர் அலுவலகம், 1916ல, பிரிட்டிஷ் ஆட்சியில கட்டின கட்டடத்துல இயங்கிண்டு இருக்கு... இப்ப இதே வளாகத்துல, தரை மற்றும் மூணு தளங்களோட, 20 கோடி ரூபாய் மதிப்புல, புதிய கட்டடத்தை கட்டிண்டு இருக்கா ஓய்...
''கட்டட பணிகளை, அப்பப்ப ஆய்வு செய்த வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாரிடம், கூடுதல் நிதி கேட்டு, அதிகாரிகள் கோரிக்கை வச்சிருக்கா... அவரும், முதல்வரிடம் பேசி, உடனே கூடுதலா, 10 கோடி ரூபாயை
ஒதுக்கிட்டார்...
''முதல்வரை வெச்சு கட்டடத்தை திறக்க திட்டமிட்டு, பணிகள் வேகவேகமா நடந்துண்டு இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முதல்வர்னு சொன்னதும் தான் ஞாபகம் வருதுங்க... அவரோட மாவட்டத்துல, அ.தி.மு.க., ரொம்பவே, 'வீக்'கா இருக்காமுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தி.மு.க.,வின் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், முதல்வரின் சேலம் மாவட்டத்துல, தி.மு.க., வெற்றி வாய்ப்பு பத்தி ஒரு, 'சர்வே' எடுத்திருக்காருங்க... அங்க இருக்கிற, 11 தொகுதிகள்ல, முதல்வரின், எடப்பாடியும், சேலம் தெற்கு தொகுதியும் மட்டும் தான், அ.தி.மு.க.,வுக்கு சாதகமா இருக்குதுங்க...
''மற்ற ஒன்பது தொகுதிகள், தி.மு.க.,வுக்கு தான் சாதகமா இருக்குன்னு தெரிய வந்திருக்கு... இது, அ.தி.மு.க., தலைமைக்கும் தெரிஞ்சிருக்கு... அவங்களும், தங்களது ஆலோசகர் சுனிலை வச்சு, 'சர்வே' எடுக்க சொல்லியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சேகரித்த நிவாரண பொருட்களை பதுக்க ஆரம்பிச்சிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''ஊரடங்கால பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவ, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தை துவங்குனாரே... மாவட்டச் செயலர்கள் ஏற்பாட்டுல, வர்த்தக நிறுவனங்கள், தொழிலதிபர்கள், கான்ட்ராக்டர்களிடம் பொருட்களையும், பணத்தையும் வசூல் செஞ்சு, நிவாரண பொருட்களை குடுத்தாங்க பா...
''இந்தப் பணிகள்ல ஈடுபட்ட, ஜெ.அன்பழகன், கொரோனா தாக்கி இறந்து போயிட்டதால, நிவாரண நிகழ்ச்சிகளை ஸ்டாலின் நிறுத்தச் சொல்லிட்டார்...
''இதனால, சேகரித்த பல டன் அரிசி, கோதுமை, ரவை, சோப்பு, கிருமி நாசினியை மாவட்ட நிர்வாகிகளும், பகுதி, வட்ட நிர்வாகிகளும் பதுக்கிட்டாங்க...
''இதை எப்படி, ஸ்டாலின் காதுக்கு கொண்டு போறதுன்னு தெரியாம, தொண்டர்கள் முழிக்கிறாங்க பா...'' என, முடித்து அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
26-ஜூன்-202016:27:41 IST Report Abuse
Baskar இப்போ தெரிகிறதா தி.மு.க வினர் எப்போதும் திருடர்கள் தான் என்று. குண்டூசியை கூட எடுக்கும் கும்பல் இது தான்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
26-ஜூன்-202015:34:31 IST Report Abuse
r.sundaram எதில் கையை வைப்பது என்று தெரியாத கொள்ளை கூட்டம். திருந்தாத திருத்த முடியாத கூட்டம்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-ஜூன்-202010:12:58 IST Report Abuse
கல்யாணராமன் சு. கொள்ளையடிக்கிறதும், பதுக்கறதும், திமுகவுக்கு ஒண்ணும் புதுசில்லையே. மறைந்த, மற்றும் இருக்கும் தலைவர்கள் சொல்லிக்கொடுத்த பாடம் அல்லவோ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X