பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூன் 26, 1972

திருவாரூர் மாவட்டம், திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில், 1908 ஆக., 27ம் தேதி பிறந்தவர், எம்.எம்.தண்டபாணி தேசிகர். சிவத்தொண்டு புரியும் ஓதுவார் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இளம்வயதிலேயே, இவருக்கு இசை ஆர்வம் ஏற்பட்டது. மதுரையில் நடந்து வந்த, தேவாரப் பாடசாலையின் ஆசிரியராக, 18-வது வயதில் பொறுப்பேற்றார்.அண்ணாமலைப் பல்கலையின், இசைத் துறைத் தலைவராக, 15 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது, 'தமிழ்ப் பாமாலை' என்ற நுாலை வெளியிட்டார். திருக்குறளுக்கு, முதன்முதலாக இசை அமைத்து, அதை இறைவணக்கமாக, மேடையில் பாடினார். தேவாரப் பாடல்களை, இசைத் தட்டுகளாக வெளியிட்டார்.
பட்டினத்தார், நந்தனார், தாயுமானவர், மாணிக்கவாசகர், திருமழிசை ஆழ்வார் உள்ளிட்ட, பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 'சங்கீத சாகித்திய சிரோமணி, சங்கீத கலாசிகாமணி, இசைப்பேரறிஞர்' உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1972 ஜூன், 26ம் தேதி காலமானார்.'நடமாடும் தமிழிசை' எம்.எம்.தண்டபாணி தேசிகர் காற்றில் கலந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X