தாராவியில் புதிதாக 11 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவின் தாராவியில் கொரோனா தொற்றுக்கு மேலும் 11 பேர் இன்று பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. அதிக குடிசை பகுதிகளை கொண்ட தாராவியில் நோய் பாதிப்பு விகிதத்தில் சற்று மாறுபட்ட நிலை உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களாக தாராவியில் நோய் பாதிப்பு குறைந்து வந்தது.

இந்நிலையில் 11 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதியானது. தாராவியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,210 ஆக உயர்ந்தது. தாராவியில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,021 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,108 ஆக அதிகரித்தது. இம்மாதத்தில் தாராவியில் கொரோனா வளர்ச்சி விகிதம் 1.02 சதவீதமாக குறைந்தது.


latest tamil news



தொடர்ந்து, தாதரில் ஒரே நாளில் 27 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக 15 பேர் சராசரியாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர். தாதரில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 735 ஆக உயர்ந்துள்ளது என மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது. தாதரில் 332 பேர் குணமடைந்தனர். தற்போது வரை 382 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X