அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழச நினைச்சு பாக்கணும்: தி.மு.க.,வுக்கு நிர்மலா அறிவுரை

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
  தி.மு.க.,வுக்கு நிர்மலா அறிவுரை

சென்னை : 'அவசர நிலையை பிரகடனம் செய்து, ஜனநாயக உரிமைகளை பறித்த காங்கிரசுடன், தி.மு.க., கைகோர்த்து விட்டு, ஜனநாயகம் குறித்து பேசுவது ஆச்சரியமாக உள்ளது. அன்று நடந்ததை, தி.மு.க., நினைத்து பார்க்க வேண்டும்,'' என, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., ஏற்பாடு செய்த, 'காணொளி பேரணி' நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, அவர் பேசியதாவது: மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, ஓராண்டில் நிறைவேற்றி உள்ளோம்; இன்னும் செய்ய வேண்டி உள்ளது. காங்கிரஸ், 45 ஆண்டுகளுக்கு முன், ஜூன், 25ல், தன் பதவி ஆசைக்காக, ஜனநாயகத்தில் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.

அவசர நிலையை பிரகடனம் செய்து, மக்களின் உரிமைகளை பறித்தது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும், சிறையில் அடைத்தனர். அந்த காங்கிரஸ் கட்சி, இன்று ஜனநாயகம் குறித்து பேசுவதை பார்த்தால், வேதனையாக உள்ளது. தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியை, சட்டத்திற்கு புறம்பாக நீக்கினர்.

மத்திய சிறையில், தி.மு.க., தலைவர்கள் உட்பட, பல தலைவர்களை அடைத்தனர்; சித்திரவதை செய்தனர். அக்கட்சி, இன்று காங்கிரசோடு சேர்ந்து, எதிர்க்கட்சியாக பேசுவதை பார்க்கும் போது, ஆச்சரியமாக உள்ளது. அன்று நடந்ததை, தி.மு.க., நினைத்து பார்க்க வேண்டும். இரண்டாம் முறையாக, ஆட்சிக்கு வந்த ஓராண்டில், பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். நாட்டு மக்கள் அனைவரும், ஒரே உரிமையுடன் இருக்க வேண்டும் என்பது, கட்சி கொள்கை. அதற்காக, ஆட்சிக்கு வந்து, 100 நாட்களுக்குள், ஜம்மு காஷ்மீருக்கான, 370வது சட்டப் பிரிவை நீக்கினோம்.

தற்போது அங்குள்ள மக்களுக்கு, அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. பாரத நாட்டில் சரணடைந்தவர்களுக்கு, குடியுரிமை வழங்குவதற்காக, சட்ட திருத்தம் கொண்டு வந்தோம்.

விவசாயிகள் வருமானத்தை, 2024ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் முயற்சியாக, பல்வேறு திட்டங்களை, பிரதமர் செயல்படுத்தி வருகிறார். அனைத்து விவசாயிகளுக்கும், வருமானம் கூடுதலாக வேண்டும் என்பதற்காக, ஆண்டுக்கு, 6,000 ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும், 16 கோடி விவசாயிகளுக்கு, பணம் செல்கிறது. தமிழகத்தில், 35.59 லட்சம் விவசாயிகளுக்கு, அவர்கள் வங்கி கணக்கில், 710 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

மீன் உற்பத்தியில், உலக அளவில், நான்காம் இடத்தில் உள்ளோம். முதல் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டம் போடப்பட்டுள்ளது. மீன்களை பதப்படுத்த தேவையான உபகரணங்கள் வாங்க, துறைமுகம் கட்ட, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, இந்நிதி பயன்படுத்தப்படும். தமிழக மீனவர்களுக்கும் பலன் கிடைக்கும்.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, ஜூன், 11 வரை, 1,937 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2019 - -20ல், 5,130 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

கொரோனாவை சமாளிக்க, மருத்துவ உபகரணங்கள் வாங்க, தமிழகத்திற்கு, 6,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வந்த பின், ஏழை மக்களுக்கு உதவ, 44 கோடி ரூபாய்க்கு, அரிசி, கோதுமை வழங்கப்பட்டது. ஜன்தன் கணக்கில், மாதம், 500 ரூபாய் வீதம், 1.24 கோடி பெண்களுக்கு, 610 கோடி ரூபாய், ஏப்ரல், மே மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.நம் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை, இறக்குமதி செய்ய வேண்டியதில்லை. இதை நாம் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது தான், சுய சார்பு திட்டம்.ஓராண்டில் நடந்த நற்செயல்களை, பா.ஜ., தொண்டர்கள், மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.இவ்வாறு, நிர்மலா சீதாராமன் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிடன் - bombay,இந்தியா
27-ஜூன்-202020:48:26 IST Report Abuse
திராவிடன் நாங்களும் அதை தான் சொல்கிறோம். நினைத்து பார்க்கணும்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
27-ஜூன்-202010:21:51 IST Report Abuse
Girija உங்கள் பதிவை பார்க்கும் போது ஆண்டிபட்டி ராஜா ஒரு கல்லூரி விழாவில் மாணவியிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டது தான் நினைவிற்கு வருகிறது. அந்த நிகழ்ச்சியை மீம்ஸ் போட்டு கில்லி பட டயலாக் " பதில சொல் முதல்ல " என்பதை சேர்த்திருப்பார்கள். தனிநபர் விமர்சனம் இல்லாமல் பிரச்சனைக்கு தீர்வு முடிந்தால் சொல்லவும்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
26-ஜூன்-202023:49:22 IST Report Abuse
konanki மிசால ஜெயில போட்டாங்க அதுக்கென்னா இப்போ? கூட்டணி ல இருந்து 1,76,00,000,00,00,000 திருடில்ல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X