பார்லி.,யை கூட்டாத மத்திய அரசுக்கு காங். கிடுக்கிப்பிடி!

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
பார்லி., கூட்டம், மத்திய அரசு, காங். கிடுக்கிப்பிடி!

'சீன எல்லை விவகாரம் உட்பட முக்கிய பிரச்னைகளில், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணை களில் இருந்து, இனியும் தப்பிக்க முயற்சிக்கக் கூடாது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பார்லிமென்டை கூட்ட, மத்திய அரசு முன்வர வேண்டும்' என, காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான மணிஷ் திவாரி, 'ஆன்லைன்' மூலமாக கூறியதாவது:முக்கிய பிரச்னைகள், குவிந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம், விவாதிக்கப்பட வேண்டியவை. கடந்த, 1962 போரின் போதுகூட, பார்லிமென்டை கூட்டியாக வேண்டுமென, அப்போதைய பா.ஜ., தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய், கடுமையாக வாதிட்டார்.


'ஜி- - 20' நாடு



அவரது கோரிக்கையை ஏற்று, பார்லிமென்ட் கூட்டப்பட்டது என்பதை, தற்போதைய ஆட்சியாளர்கள் மறந்து விடக் கூடாது. பார்லி., நிலைக்குழு கூட்டங்கள் கூட, நடத்தப்படாமல் உள்ளன.பார்லிமென்டை கூட்ட வேண்டுமென்ற அக்கறை, இரு சபைகளின் தலைவர்களுக்குமே இல்லை என்பது தான் துரதிருஷ்டம். பார்லிமென்ட் நடவடிக்கைகளில் இருந்து, அரசை தப்ப வைக்க, இருவரும் துணை போகக் கூடாது.
ரஷ்யா, இந்தியா, சீனா மூன்றும், 'ஆன்லைன்' மூலமாக, உச்சிமாநாடு நடத்த முடிகிறது. 'ஜி- - 20' நாடுகளின் மாநாடும், அவ்வாறு நடத்த முடிகிறது. சீனா விவகாரம் குறித்த அனைத்துக் கட்சி கூட்டமும் கூட, ஆன்லைன் மூலமாக, பிரதமரால் நடத்த முடிகிறது.ஆனால், நிலைக்குழு கூட்டங்களை மட்டும் நடத்த முடியாமல் போவது ஏன்? தற்போதைய சூழ்நிலையில், முழு அளவிலான பார்லி., கூட்டத்தொடரை, நடத்த முடியாது தான். ஆனால், உலகம் முழுவதும், ஆன்லைன் மூலமாக, பார்லிமென்ட் நடவடிக்கைகள், நடைபெற்று வருகின்றன.சமீபத்தில், பிரிட்டனில் ஆன்லைன் வாயிலாக பார்லிமென்ட் கூட்டம் நடைபெற்றது. இங்கு மட்டும் என்ன பிரச்னை என்பது தான் புரியவில்லை.இவ்வாறு, மணிஷ் திவாரி கூறினார்.


வெற்றி பெறாது



காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய் கூறியதாவது:பார்லிமென்டை கூட்டுவதில், அரசுக்கு பெரும் தயக்கம் உள்ளது. எதிர்க்கட்சிகள் மூலமாக, நாட்டு மக்கள் எழுப்பும் கேள்விகளில் இருந்து தப்பிக்க, ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்; அது நிச்சயம் வெற்றி பெறாது.இவ்வாறு அவர் கூறினார். - --நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
28-ஜூன்-202006:34:25 IST Report Abuse
Indhuindian எப்படியும் பாராளுமன்ற கூட்டம் நடக்கும். அதுக்கு முன்னாடி ராஜிவ் காந்தி பவுண்டேஷனுக்கு கொள்ளை அடிக்கப்பட்ட சமாச்சாரத்துக்கு முட்டு கொடுக்கற வழிய யோசனை பண்ணி வையுங்க. அதை கேட்டா கூச்சல் போட்டு வெளி நடப்பு செய்ய தயாரா இருங்க
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
26-ஜூன்-202021:39:17 IST Report Abuse
Darmavan இந்த காங்கிரஸ் திருடர்கள் நாட்டை வந்த விலைக்கு சீனாவுக்கு விற்றுவிடுவார்கள்.
Rate this:
Cancel
Raman - Bengaluru,இந்தியா
26-ஜூன்-202014:37:12 IST Report Abuse
Raman வந்துட்டாங்க தேசபக்தர்கள் சீனாவிடமிருந்து மூணு லக்ஷ்ம் America டாலர் வாங்கினவுனுங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X