பொது செய்தி

இந்தியா

கவச உடைகள் உற்பத்தி விதிமுறையில் தளர்வு ; மத்திய அரசு அறிவிப்பு

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : கொரோனா பாதிப்புகளையொட்டி, சுகாதார பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) தயாரிப்பு விதிமுறைகளில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதலில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். அதன் மூலமாக நோய் பரவுதலை கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதற்காக பிபிஇ கிட்ஸ் எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (கவச உடைகள்) வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக சீனாவில் இருந்து பரிசோதனை கருவிகள் வரவழைக்கப்பட்டன.


latest tamil newsஅவற்றில் பெரும்பாலானவை போலியானவை மற்றும் உண்மையான சோதனையை கண்டறிய முடியாதவை என சீனாவின் பொருட்களுக்கு எதிராக பல நாடுகளும் திரண்டு, சீனாவிற்கு திரும்ப அனுப்பியது. இந்நிலையில் இந்தியாவில் உள்நாட்டிலேயே பரிசோதனை கருவிகள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இவற்றின் உற்பத்திக்கான விதிமுறையை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தரமான கவச உடைகளையும், கருவிகளையும் வினியோகிக்க வசதியாக இந்த தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் முக கவசங்கள், அறுவை சிகிச்சை கருவி மற்றும் கண் பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கருவிகள் தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்பு மாதிரிகளை இந்திய தர நிர்ணய பணியகம் உரிமம் பெற்ற ஆய்வுக்கூடங்களில் அல்லது அந்த அமைப்பினால் பட்டியலிடப்பட்ட தனியார் அல்லது அரசு ஆய்வுக்கூடங்களில் சோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூன்-202008:15:47 IST Report Abuse
தல புராணம் டாக்ட்டர்களுக்கும், நர்ஸுகளுக்கும், வார்டு பாய்களுக்கும் தானே ஆபத்து வரும்.. அப்போ கவலையில்லை.. கிழிச்சே கூட கொடுங்க..
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
26-ஜூன்-202005:45:47 IST Report Abuse
B.s. Pillai While relaxing the rules to make it available quickly and in sufficient numbers, there should never be any compromise on the quality of the products. So the manufacturers also should keep the Nation first and prove to the world that we , the indians, are better in quality manufacture, consistent with speed and price. Let us be equiped well to conquer the world in a different plane of durability and trust worthy, combined with speed.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X