வருவாய்த்துறை அலுவலர்சங்கத்தினர் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை அலுவலர்சங்கத்தினர் போராட்டம்

Added : ஜூன் 25, 2020
Share

திண்டிவனம் : கொரோனா பணியின் போது, உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி, திண்டிவனத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் திண்டிவனம் கிளை சார்பில், கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று காலை போராட்டம் நடத்தினர். கொரோனா பணியின் போது இறந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்திற்கு அரசு அறிவித்த ரூ.50 லட்சத்தை நிவாரணமாக வழங்க வேண்டும், காலியாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் திண்டிவனம் கிளை சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X