கால்வாயில் தேங்கும் கழிவு நீர் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால்வாயில் தேங்கும் கழிவு நீர் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

Added : ஜூன் 25, 2020
Share
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை கால்வாயில் தேங்கும் கழிவு நீரினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவலுார்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் திடல் அருகில், கழிவு நீர் செல்லும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இதில் செல்லியம்மன் கோவில் தெரு, மங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கழிவு நீர் செல்கிறது.கழிவு நீர் பெத்தான்

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை கால்வாயில் தேங்கும் கழிவு நீரினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவலுார்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் திடல் அருகில், கழிவு நீர் செல்லும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இதில் செல்லியம்மன் கோவில் தெரு, மங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கழிவு நீர் செல்கிறது.கழிவு நீர் பெத்தான் குளத்தில் சென்று கலப்பதால், கடந்த ஓராண்டாக கால்வாய் தற்காலிகமாக மூடப்பட்டது.இதனால் கால்வாயில் தேங்கும் கழிவு நீர் வெளியே செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதில் பன்றிகள் கூட்டமாக இறங்கி புரள்கிறது.கால்வாயில் தேங்கும் கழிவு நீர் மற்றும் துர் நாற்றத்தினால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

கிராம மக்கள் நலன் கருதி கழிவு நீர் முறையாக கால்வாயில் செல்வதற்கு மேல்மலையனுார் பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X