நித்தியானந்தா நகரில் புதிய தார் சாலை அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நித்தியானந்தா நகரில் புதிய தார் சாலை அமைப்பு

Added : ஜூன் 25, 2020
Share

விழுப்புரம் : தினமலர் செய்தி எதிரொலியாக, விழுப்புரம் நித்தியானந்தா நகரில் குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்கப்பட்டு, புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நித்தியானந்தா நகரில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்களின் மண் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இது குறித்து, தினமலர் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, நித்தியானந்தா நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் தற்போது புதியதாக தார் சாலை அமைக்கப் பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X