சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாரை கண்டித்து பொதுமக்கள் மறியல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திட்டக்குடி : திட்டக்குடி அருகே விபத்து வழக்கில் குற்றவாளிக்கு சாதகமாக போலீசார் செயல்பட்டதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 48. இவர் நேற்று முன்தினம் மாலை திட்டக்குடிக்கு சைக்கிளில் சென்றபோது கம்பி ஏற்றி சென்ற பொலிரோ பிக்கப் வேன் மோதி அதே இடத்தில் இறந்தார்.இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். அன்றிரவே வாகனத்தில் இருந்த கம்பி, போலீசாரின் அனுமதியுடன் மாற்று வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.தகவலறிந்த கிராம மக்கள் நேற்று காலை 10.40 மணிக்கு திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்த கம்பியின் எடை அளவுக்கு அதிகமாக இருந்ததாலேயே விபத்து ஏற்பட்டது.

வாகனத்தில் இருந்த கம்பிகளை வேறு வாகனத்தில் எடுத்து சென்றது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதற்கு உடந்தையாக இருந்த போலீசாரைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி.,வெங்கடேசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சாலையில் இருந்து அகற்ற உத்தரவிட்டார். போலீசார் பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் திட்டக்குடி -- விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X