பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மணல் குவாரியை நிறுத்த மனு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

விழுப்புரம் : டி.புதுப்பாளையம் அரசு மணல் குவாரியை தடுத்து நிறுத்த கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
புரட்சி பாரதம் கட்சியின் திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சந்தோஷ் தலைமையில் கொடுத்துள்ள மனு;டி.புதுப்பாளையம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி அமைத்து ஒரு அடி முதல் 6 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி வருகின்றனர். இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் நிலை உள்ளது.மேலும், சின்னசேலம், ரிஷிவந்தியம், செஞ்சி, விழுப்புரம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டம் பாதிப்படையும் நிலை உள்ளது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டி.புதுப்பாளையம் அரசு மணல் குவாரியை தடுத்து நிறுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X