விழுப்புரம் மாவட்டஎல்லைகள் மூடல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டஎல்லைகள் 'மூடல்'

Added : ஜூன் 25, 2020
Share

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதைக்கட்டுப் படுத்த, தமிழகத்தில் நேற்று முதல் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பொதுமக்கள் செல்லாத வகையில், முதல்வர் கட்டுப்பாடு விதித்தார்.இதற்காக, அந்தந்த மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தினார். அதன்படி, விழுப்புரம் மாவட்ட எல்லைகள் முழுவதும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. அங்கு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, கண்காணித்து வருகின்றனர்.

அரசு அனுமதி சீட்டு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X