பொது செய்தி

இந்தியா

விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு: 'இஸ்ரோ'சிவன் வரவேற்பு

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
விண்வெளி துறை, தனியார் பங்களிப்பு: சிவன் வரவேற்பு

புதுடில்லி,: விண்வெளித் துறையில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பிற்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசின் நடவடிக்கையை, 'இஸ்ரோ' தலைவர் சிவன் வரவேற்றுள்ளார்.


ஒப்புதல்



பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக, 'இன் - ஸ்பேஸ்' எனப்படும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தை உருவாக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, இஸ்ரோவின் தலைவர் சிவன், இந்த முடிவை வரவேற்றுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று கூறியதாவது:விண்வெளித் துறையில், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது; இது, மிகப்பெரிய சீர்திருத்தமாகும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை, விண்வெளித் துறையில் விரைவான வளர்ச்சியை உறுதிப்படுத்தும். மேலும், உலக விண்வெளி பொருளாதாரத்தில், இந்தியா முக்கிய பங்கு வகிக்க உதவும்.


நடவடிக்கை



இஸ்ரோ மேற்கொள்ளும் கிரகங்களுக்கு இடையிலான ஆய்வு திட்டங்களிலும், இனி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கலாம். இதன்படி, ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குதல், வணிக அடிப்படையில் ஏவுதளத்தை அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட, அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால், இஸ்ரோவின் செயல்பாடுகள் ஒருபோதும் குறையாது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இன் ஸ்பேஸ் மையத்தில், தொழில், கல்வி மற்றும் அரசுத் துறை பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். இந்த மையம் முழுதுமாக செயல்பட, மூன்று முதல் ஆறு மாதம் வரை ஆகும். எனினும், விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள், இன் ஸ்பேஸ் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து, இன் ஸ்பேஸ் மையம் எடுக்கும் முடிவுகள் அடிப்படையில், பங்குதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


தொழில்நுட்ப சக்தி



இந்த சீர்திருத்தம் மூலம் உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள, இளைஞர்கள் பலர் முன்வருவர் என, நம்புகிறேன். உலகளவில், மிகப் பெரிய தொழில்நுட்ப சக்தியாக இந்தியாவை உயர்த்த, தனியார் நிறுவனங்களை, நான் முழு மனதோடு அழைக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
26-ஜூன்-202022:43:11 IST Report Abuse
raja செம ஜால்றா அடுத்த குடியரசு தலைவர் ரெடி
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-202019:17:40 IST Report Abuse
bigu இவர் அரசு ஊழியரா இல்லை பிஜேபி இன் எடுபுடியா. இவரும் தனியார் என்று ஆரம்பிச்சுட்டார்
Rate this:
Cancel
26-ஜூன்-202018:56:43 IST Report Abuse
வெற்றி கொண்டான்  ::  தமிழன் மத்தியில் ஆளும் பாஜக அரசு அனைத்து துறைகளிலும் தனியார் துறையை ஊக்கப்படுத்தும் செயலே சமூகநீதி மூலம் இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தின் கீழ் நிலையில் உள்ள மக்கள் மேலே வரக்கூடாது என்ற எண்ணத்தில் மட்டுமே. சிறந்த நிபுணத்துவம் பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கொண்ட இஸ்ரோ அமைப்பிலிருந்து வெளியேறி கூடுதல் வருமானம் சம்பாதிப்பதற்காக தனியார் நிறுவனங்களில் சேர்வதற்கான வாய்ப்புகளை இது உருவாக்கும். அரசாங்கமே தனியார் விண்வெளி ஆராய்ச்சி துறையை பயன்படுத்தவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் லாப நோக்கத்தில் செயல்படும் அவர்களிடமிருந்து பணம் கொடுத்தால் மட்டுமே அவர்களது சேவையை பெற முடியும். ஓய்வுபெற உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் அது தற்போதைய இஸ்ரோ தலைவருக்கும் பொருந்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X