பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை தேவை

Added : ஜூன் 25, 2020
Share

புதுச்சத்திரம் : சான்றோர்மேட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சத்திரம் அடுத்த சான்றோர்மேட்டில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடலூர் - சிதம்பரம் பகுதிகளுக்கு செல்ல இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறிச்செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள்நிழற்குடை இல்லை. இதனால் வெயில் காலங்களில் மரத்தடியில் நின்று பஸ் ஏறிச்செல்லும் அவலம் உள்ளது. மேலும் மழைக் காலங்களில் நனைந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சான்றோர்மேட்டில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X