தியாகத்தை மறக்க மாட்டோம்!

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 தியாகத்தை மறக்க மாட்டோம்!

கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நெருக்கடி நிலையை எதிர்த்து, ஏராளமானோர் போராடினர். அவர்களது தியாகத்தை நாட்டு மக்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். நாடும் மறக்காது.

நரேந்திர மோடி, பிரதமர்

குடும்ப நலனுக்கு முக்கியத்துவம்!காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தான், 45 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடி நிலையை அறிவித்தனர். பத்திரிகை, நீதிமன்றம், பேச்சு சுதந்திரம் எல்லாம் ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டன. ஒரே நாளில், நாடே சிறைச்சாலையானது. நாட்டின் நலன், நாட்டு மக்களின் நலனை விட, ஒரு குடும்பத்தின் நலனே மேலோங்கி இருந்தது.

அமித் , உள்துறை அமைச்சர், பா.ஜ.,

மக்கள் கவனிக்கின்றனர்!

இந்திய - சீன எல்லையில் ஏற்கனவே இருந்த நிலை, ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மாறியுள்ளது; இதை மறுக்க முடியாது. கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது என, சீனா மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது. எனவே, மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, எல்லையில் பழைய நிலையை மீட்டெடுக்குமா என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுஇருக்கின்றனர்.

சிதம்பரம், மூத்த தலைவர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X