செஞ்சியில் வேகமாக பரவும் தொற்று | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செஞ்சியில் வேகமாக பரவும் தொற்று

Added : ஜூன் 25, 2020
Share

செஞ்சி : செஞ்சி நகரில் நேற்று அரிசி வியாபாரி ஒருவருக்கு கொரோனா உறுதியானது. தொற்று நோய் பரவலை தடுக்க மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செஞ்சி நகரில் கடந்த 20 நாட்களில் பள்ளி மாணவி, சென்னையில் இருந்து திரும்பிய மூன்று பேர், சலுான் கடைக்காரர், இவரது மகன், இளம் பெண், சிறுவணிகர், பல் மருத்துவர், இவரது மனைவி என பலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. நேற்று பீரங்கிமேடு திருவள்ளூவர் தெருவில் அரிசி வியாபாரி ஒருவருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதியானது. சுகாதாரத்துறையினர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரிக்கு அழைத்து சென்றனர். அவர் வசித்த தெருவில் வருவாய்த்துறையினரும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் தடை ஏற்படுத்தினர்.

பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் தீவிர சுகாதார பணிகளை மேற்கொண்டனர். இதே போல் செஞ்சியை ஓட்டியுள்ள சிங்கவரத்தில் நேற்று 27 வயது வாலிபருக்கு கொரோனா உறுதியானது. செஞ்சியில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் செஞ்சி நகரத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி நோய் பரவாமல் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X