ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டுகிறது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டுகிறது

Added : ஜூன் 25, 2020
Share
 ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டுகிறது

புதுடில்லி; நேற்று ஒரே நாளில், நாடு முழுதும், 16 ஆயிரத்து, 922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும், 418 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை, 14 ஆயிரத்து, 894 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:ஆறாவது நாள்கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம், 57.43 சதவீதமாக அதிகரித்துள்ளது; இது, சாதகமான அம்சம். இதுவரை, நாடு முழுதும், 2.71 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும், 16 ஆயிரத்து, 922 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில், 16 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவது, இதுவே முதல் முறை.தொடர்ந்து ஆறாவது நாளாக, பாதிப்பு எண்ணிக்கை, 14 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதன் வாயிலாக, மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 4.73 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று, 418 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை, 14 ஆயிரத்து, 894 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பலியான, 418 பேரில், மஹாராஷ்டிராவில் மட்டும், 208 பேர் இறந்துள்ளனர். டில்லியில், 64; தமிழகத்தில், 33; குஜராத்தில், 25; கர்நாடகாவில், 14; மேற்கு வங்கத்தில், 11 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கையிலும், 6,739 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. டில்லியில், 2,365; குஜராத்தில், 1,735; தமிழகத்தில், 868; உத்தர பிரதேசத்தில், 596 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பாதிப்பு உறுதிபலியானோரில், 70 சதவீதம் பேர், ஏற்கனவே பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள்.

கொரோனா பாதிப்பிலும், மஹாராஷ்டிராவே முதலிடத்தில் உள்ளது. இங்கு மட்டும், 1.43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். டில்லியில், 70 ஆயிரத்து, 390 பேருக்கும், தமிழகத்தில், 67 ஆயிரத்து, 468 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.குஜராத்தில், 28 ஆயிரத்து, 943; உ.பி.,யில், 19 ஆயிரத்து, 557; ராஜஸ்தானில், 16 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X