பொற்பந்தல் ஏரி கால்வாய் ரூ.17 லட்சத்தில் சீரமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொற்பந்தல் ஏரி கால்வாய் ரூ.17 லட்சத்தில் சீரமைப்பு

Added : ஜூன் 25, 2020
Share

உத்திரமேரூர்: பொற்பந்தல் ஏரிக்கு மழைநீர் செல்லும், வரத்து கால்வாய், 17.47 லட்சம் ரூபாய் செலவில், சீரமைக்கப்பட்டு உள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஏரி நீரை பயன்படுத்தி, 50 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாய் துார்ந்து கிடந்தது. இக்கால்வாயை சீரமைக்கும்படி, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 17 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில், உத்திரமேரூர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், பொற்பந்தல் சிமென்ட் லைனிங் வரவு கால்வாய் சீரமைக்கப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X